மெதுவான ஆட்டத்தால் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ள அஜின்க்யா ரஹானே – அவரது இடத்தை பிடிக்கப்போகும் இளம்வீரர்

Ajinkya-Rahane
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 6 போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படும் இந்த தொடரை வென்று அவரை சாம்பியனாகவே வழி அனுப்ப வேண்டும் என்று சென்னை அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவ்வேளையில் சிஎஸ்கே அணியானது நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்று பலமான இடத்தினை பெறும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

என்னதான் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் அந்த அணியில் ஒரு சில பிரச்சினைகள் இருக்கிறது. அந்த வகையில் சென்னை அணியில் மூன்றாவது வீரராக விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே இந்த ஆண்டு பார்மின்றி தவிர்த்து வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டின் போது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் அதிரடியாகவும் விளையாடி அட்டகாசப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரில் இதுவரை 124 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் ரஹானே 125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருவது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ரஹானேவை நீக்கிவிட்டு இளம் வீரருக்கு அந்த இடத்தில் வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஹானேவிற்கு 35 வயதாகி விட்டதால் இந்த ஆண்டுடன் அவரை ஓரம் கட்டிவிட்டு அவருக்கு பதிலாக ஒரு இளம்வீரரை கொண்டு வரவும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடிக்கனும்ன்னு வேண்டிக்கிறோம் ஆனா.. லக்னோவின் நெஞ்சை தொடும் 2 பேனர்கள்

அந்த வகையில் இந்த ஆண்டுடன் ரஹானே வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சமீர் ரிஸ்வியை அந்த இடத்தில் தொடர வைக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இல்லை என்ற பேச்சு இருந்து வந்த வேளையில் இந்த ஆண்டு ஏகப்பட்ட இளம் வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement