கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடிக்கனும்ன்னு வேண்டிக்கிறோம் ஆனா.. லக்னோவின் நெஞ்சை தொடும் 2 பேனர்கள்

MS Dhoni LSG
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைத்துள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

மேலும் 42 வயதை கடந்து விட்டதால் இம்முறை 8வது இடத்தில் களமிறங்கும் அவர் அரிதாகவே பேட்டிங் செய்ய வருகிறார். அதனால் அவர் பேட்டிங் செய்ய வரும் போது மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு சேப்பாக்கத்தில் உள்ள ரசிகர்கள் வெறித்தனமாக கூச்சலிட்டு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சொல்லப்போனால் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு சென்னையை தாண்டி வெளி மாநிலங்களிலும் ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பு கொடுக்கின்றனர்.

- Advertisement -

நெகிழ்ச்சியான பேனர்:
அந்த வரவேற்புக்கு மத்தியில் விசாகப்பட்டினத்தில் டெல்லிக்கு எதிராக தோனி 37* (16) ரன்கள் அடித்தது ரசிகர்களை சிஎஸ்கே அணியின் தோல்வியை மறந்து கொண்டாட வைத்தார். அதை விட மும்பைக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் கடைசி 4 பந்துகளில் 20* ரன்கள் அடித்து 2011 உலகக்கோப்பை பைனல் போல ஃபினிஷிங் கொடுத்த அவர் சிஎஸ்கே அணியின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

இந்நிலையில் சென்னை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அங்கே வருகை தரும் தோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோ அணை நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் பெரிய பேனர் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் ஒரு பேனரில் “எங்களுக்கு தோனி சிறப்பாக விளையாட வேண்டும். அதே சமயம் போட்டியில் லக்னோ வெற்றி பெற வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது. அதே போல மற்றொரு பேனரில் “எங்களுக்கு கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க வேண்டும். ஆனால் அப்போது வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 12 ரன்கள் தேவையாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 பேனரின் அடியில் “34வது லீக் போட்டி என்பது 3 மற்றும் 4 சேர்ந்த 7வது நம்பரை குறிக்கிறது. அதற்கு காரணம் தல (தோனியின் ஜெர்ஸி எண்)” என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 8 ஓவர்ஸ்.. அதை மட்டும் குழப்பாம செஞ்சுருந்தேன்னா இந்தியா 2023 உ.கோ ஜெயிச்சுருக்கும்.. ராகுல் வருத்தம்

அந்த வகையில் எதிரணியாக இருந்தாலும் தோனி நன்றாக விளையாட வேண்டும் என்று மிகவும் மதிப்பளித்து லக்னோ நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் லக்னோ நிர்வாகம் பகிர்ந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement