- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எந்த இடத்துல இறக்கிவிட்டாலும் விளையாட நான் ரெடி. கேப்டன் கிட்டயே சொல்லிட்டேன் – இளம்வீரர் அதிரடி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தற்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான ராகுலின் ஆட்டம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக படுமோசமாக உள்ளது என்று கூறலாம். ஏனெனில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டக் அவுட்டாகிய ராகுல் ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே அடித்ததார்.

- Advertisement -

ராகுலின் இந்த பொறுமையான ஆட்டம் காரணமாக அவர் மீது தற்போது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது சூரியகுமார் யாதவ் கலந்து கொள்ளையில் : டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களம் இறங்குவீர்களா? என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : அப்படியென்றால் கே.எல் ராகுலை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என சிரித்துக் கொண்டே செய்தியாளரை மடக்கினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும்.

- Advertisement -

மற்றபடி அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் தான். எனவே அவரது இடத்தில் நான் விளையாட மாட்டேன் என்று தெளிவாக தெரிவித்தார். அதோடு மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் நான் எந்த இடத்தில் இறங்கினாலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகிய இருவரிடமே தெரிவித்துள்ளேன்.

இதையும் படிங்க : அவர இப்படி பார்த்து எவ்ளோ வருசங்கள் ஆச்சு – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி, முழுவிவரம்

எந்த இடத்தில் விளையாடினாலும் நான் எனது அணிக்காக பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே உன்னிப்பாக இருக்கிறேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by