- Advertisement -
ஐ.பி.எல்

சதத்தை விட அதுக்காக அப்செட்டானேன் .. போட்டியை மாத்துனதே அவர் தான்.. ஆட்டநாயகன் ருதுராஜ் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் 212/3 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 (54), டேரில் மிட்சேல் 52 (32), சிவம் துபே 39* (20) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 213 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 15, டிராவிஸ் ஹெட் 13, அன்மோல்ப்ரீத் சிங் 0 என டாப் 3 பேட்ஸ்மேன்களை தூஷார் தேஷ்பாண்டே சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்கம் 32, நித்திஷ் ரெட்டி 15, ஹென்றிச் க்ளாஸென் 20, அப்துல் சமத் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் ருதுராஜ்:
அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்த சென்னை 18.5 ஓவரிலேயே ஹைதராபாத்தை 134 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 4, முஸ்தபிர் ரஹ்மான் 2, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு 98 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் சதத்தை தவற விட்டதை விட 220+ ரன்களை அடிக்க முடியவில்லை என்பதில் அப்செட்டானதாக ருதுராஜ் கூறியுள்ளார். அத்துடன் இப்போட்டியில் ஜடேஜாவின் பவுலிங் திருப்புமுனையாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் தோனி போன்ற சீனியர்களிடம் தாம் எதுவும் சொல்வதில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நன்றாக உணர்கிறேன். ஈரப்பதமான சூழ்நிலைகளில் 70+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நல்ல செயல்பாடு”

- Advertisement -

“டாஸ் கிடைக்காதது ஆசீர்வாதமாக அமைந்தது. சதத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. 220+ ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும் கடைசி நேரத்தில் 4 – 5 ஷாட்டுகளை தவற விட்டது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இன்னிங்ஸ் இடைவெளியின் போது அது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துமோ என்று நினைத்து அப்செட்டானேன். நல்லவேளையாக இந்த இலக்கே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது”

“கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்தோம். ஆனால் இப்போட்டியில் எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வெற்றிக்கான ஸ்கோர் எது என்பது உங்களுக்கு தெரிவதில்லை. எனவே எப்போதும் நீங்கள் 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க வேண்டும். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தால் எதிரணியை பின்னோக்கி நடக்க வைக்கலாம். இன்று அதை செய்த தேஷ்பாண்டேவின் கடின உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: கோட்டையில் 4க்கு 4 வெற்றி.. காட்டடி ஹைதெராபாத்தை சுருட்டி வீசிய சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ரன்ரேட்டால் கம்பேக்

“அதே போல ஈரப்பதமான சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல முடியாது. எனவே நீங்கள் இருக்கையின் பின்னாடி அமர்ந்து கொண்டு அவர்களது வேலையை செய்ய விட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -