- Advertisement -
ஐ.பி.எல்

ஃபார்முக்கு வர ஹெல்ப் பண்ணாரு.. லெஜெண்ட் விராட் கோலியிடம் நிறைய கத்துக்கணும்.. ஆட்டநாயகன் ஜேக்ஸ் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற 45வது லீக் போட்டியில் குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அகமதாபாத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 201 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 84, சாருக்கான் 58 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி நங்கூரமாக விளையாடி அரை சதமடித்து 70* (44) ரன்கள் குவித்தார். அதை விட கேப்டன் டு பிளேஸிஸ் 24 ரன்களில் அவுட்டானதும் களமிறங்கிய வில் ஜேக்ஸ் குஜராத் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 5 பவுண்டரி 10 சிக்சருடன் சதமடித்து 100* (41) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜேக்ஸ்:
அதனால் 16 ஓவரிலேயே வென்ற பெங்களூரு அணி 14 வருடங்கள் கழித்து 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து அசத்தியது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக ரசித் கானுக்கு எதிராக 6, 6, 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் அவர் சதத்தை தொட்டது விராட் கோலி உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஜாம்பவான் விராட் கோலியுடன் இப்போட்டியில் இணைந்து விளையாடியது தமக்கு சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை கொடுத்ததாக தெரிவிக்கும் ஜேக்ஸ் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “தற்போது அற்புதமான உணர்வு இருக்கிறது. ஃபப் – விராட் எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆரம்பத்தில் நான் தடுமாறினேன். ஆனால் அப்போது விராட் கோலி தொடர்ந்து வேகத்துடன் விளையாடியது ஃபார்மை கண்டறிவதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்தது”

- Advertisement -

“தண்ணீர் இடைவெளியின் போது “2 ஓவரில் நல்ல ரன்களை அடித்தால் நம்மால் வெற்றி பெற முடியும்” என்று விராட் கோலியும் நானும் பேசிக் கொண்டோம். ஆரம்பத்தில் நான் பந்தை அதிகமாக அடிக்க முயற்சித்தேன். ஆனால் மோகித் சர்மாவுக்கு எதிராக ரன்கள் குவித்ததும் ரிலாக்ஸாக விளையாடிய நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். விராட் கோலி கற்பதற்காக அனைவரும் பார்க்க வேண்டிய கிரிக்கெட்டின் லெஜெண்ட்”

இதையும் படிங்க: நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல் நபராக விராட் கோலி படைத்துள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

“அவருடன் களத்தில் நேரத்தை செலவிட்டது நல்ல உணர்வையும் கற்பதற்கான வளைவையும் கொடுத்தது. ஐபிஎல் முடிந்து வெளியே சென்ற பின்பும் அவரிடம் நான் நிறைய கற்பேன். என்னுடைய இன்னிங்ஸில் ஆரம்பத்தில் நான் இன்னும் வேகமாக விளையாட முயற்சிக்க வேண்டும். இன்று எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. ஏனெனில் 17 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்படும் போது உங்களுக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு பலமுறை கிடைக்காது. இன்று சுற்றியிருந்த பல வீரர்கள் என்னை காப்பாற்றினர்” என்று கூறினார்

- Advertisement -