
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. குறிப்பாக குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த காரணத்தால் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்ட மும்பை முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
அந்த தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகியவற்றைத் தாண்டி சுமாராக கேப்டன்ஷிப் செய்த ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக அமைந்ததாக இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியாவின் பாடி லாங்குவேஜ் சுயமாக இல்லை என்று தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் விமர்சித்தார்.
கம்பீர் பதிலடி:
குறிப்பாக எம்எஸ் தோனி போல் அமைதியாக செயல்பட வேண்டுமென்ற ஈகோவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் செய்ததாக அவர் விமர்சித்திருந்தார். அத்துடன் பாண்டியாவின் கேப்டன்ஷிப் இளம் வீரர்களைக் கொண்ட குஜராத் அணிக்கு வேண்டுமானால் செட்டாகலாம் ஆனால் ரோஹித், பும்ரா போன்ற சீனியர்களைக் கொண்ட மும்பை அணியில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் பற்றி பேசுவதற்கு ஏபி டீ வில்லியர்ஸ்க்கு எந்த தகுதியும் இல்லை என்ற வகையில் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
ஏனெனில் சொந்த சாதனைகளை தவிர்த்து ஆர்சிபி அணிக்காக அவர் எதையும் சாதிக்கவில்லை என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக இருந்த போது அவருடைய சொந்த செயல்பாடுகள் என்ன? கெவின் பீட்டர்சன் அல்லது ஏபி டீ வில்லியர்ஸ் போன்றவர்கள் கேப்டனாக தங்களுடைய கேரியரில் எந்த செயல்பாடுகளையும் வெளிப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை”
“கேப்டன்ஷிப் பற்றி அவர்களுடைய புள்ளி விவரங்களை நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. தன்னுடைய சொந்த சாதனைகளை தவிர்த்து ஏபி டீ வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் எதையும் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஒவ்வொரு நாள் முடிந்ததும் அவருடைய செயல்பாடுகளைப் பற்றி மதிப்பிடுவது சரியல்ல”
இதையும் படிங்க: இளம்வீரர் சமீர் ரிஸ்விக்கு அடித்துள்ள ஜாக்பாட்.. தனியாக பிராக்டீஸ் கொடுக்கும் தோனி – எதற்கு தெரியுமா?
“எனவே அவரைப் பற்றி பேசும் வல்லுனர்கள் முதலில் தாங்கள் கேப்டனாக செயல்பட்ட போது என்ன செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம் என்பதை பார்க்க வேண்டும். அது மற்ற கேப்டன்களை விட மிகவும் மோசமாக இருக்கும். இன்று மும்பை இந்தியன்ஸ் நன்றாக செயல்படாததால் இப்படி அனைவரும் பேசுகின்றனர்” என்று கூறினார்.