இளம்வீரர் சமீர் ரிஸ்விக்கு அடித்துள்ள ஜாக்பாட்.. தனியாக பிராக்டீஸ் கொடுக்கும் தோனி – எதற்கு தெரியுமா?

Rizvi
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நோக்கி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் மூன்று முக்கிய விஷயங்களில் சிஎஸ்கே அணி தங்களது பார்வையை திருப்பும். அதில் ஒன்று கேப்டன் பதவி அந்த பதிவை ஏற்கனவே தன்னைப் போன்றே அமைதியாக ஆழமாக யோசிக்கும் ருதுராஜிடம் தோனி வழங்கி விட்டார்.

- Advertisement -

எனவே விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் தற்போது சென்னை அணியானது கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் விக்கெட் கீப்பராக துவக்க வீரரான டேவான் கான்வே அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் துவக்க வீரரான அவர் விக்கெட் கீப்பரும் கூட என்பதனால் நிச்சயம் அடுத்த ஆண்டு அவரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். அவரை தவிர்த்து ஃபினிஷர் ரோல் சென்னை அணியில் வெற்றிடமாக இருக்கிறது. இந்நிலையில் அந்த இடத்திற்கு தற்போது தோனி இளம் வீரரான சமீர் ரிஸ்வியை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தோனி தனிப்பட்ட முறையில் சமீர் ரீஸ்விக்கு பினிஷிங் பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை வலை பயிற்சியின்போது அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்டிருந்த வேளையில் தற்போது இந்த தொடரில் இறுதி கட்டத்தில் தோனி தனியாக சமீர் ரிஸ்வியை அழைத்து பின் வரிசையில் களமிறங்கும் போது எவ்வாறு போட்டிகளை முடித்துக் கொடுக்க வேண்டும்? எந்தெந்த பந்துகளில் சிக்ஸர் அடிக்க வேண்டும்? எப்படி அதிரடியான ஒரு இன்னிங்சை விளையாட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க : டெல்லிக்கு புறப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கே.எல் ராகுல் செல்லவில்லை – புதிய கேப்டன் யார்?

இதன் காரணமாக நிச்சயம் சென்னை அணியின் ஃபினிஷராக சமீர் ரிஸ்வியே மாறுவார் என்று பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறும் போதும் மீண்டும் அவரை ஏலத்தில் எடுத்து அணியில் தக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சமீர் ரிஸ்வியின் மீது தோனி நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement