- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னை காப்பாற்றும் அந்த 14 பேருக்கும்.. நான் ப்ளாஸ்ட்டான என்னாகும்ன்னு தெரியும்.. ஃபார்ம் பற்றி சூரியகுமார் பேட்டி

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறிய துணைக் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.

அதற்காக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய சூரியகுமாரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பலரும் பாராட்டினர்.

- Advertisement -

காப்பாற்றும் 14 பேர்:

அதனாலேயே கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக நம்பர் ஒன் அணியாக அசத்தி வருகிறது. இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் சூரியகுமார் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக 2025ஆம் ஆண்டு ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் அவர் தடுமாறி வருவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மோசமான ஃபார்மில் இருக்கும் தம்மை இந்திய அணியின் எஞ்சிய 14 வீரர்கள் சிறப்பாக விளையாடிய காப்பாற்றுவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் தாம் ஃபார்முக்கு திரும்பினால் எப்படி விளையாடுவேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் சூரியகுமார் கூறியுள்ளார். அதே போல தோல்விக்காக கவலைப்படாமல் மாணவர்கள் கடினமாக உழைத்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

சீக்கிரம் ப்ளாஸ்ட் ஆவேன்:

இது பற்றி அஹமதாபாத்தில் நடந்த கல்லூரி விழாவில் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் நல்ல நேரங்களை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் நாங்களும் மோசமான நேரங்களை சந்திப்போம். இது கற்றுக்கொள்ளும் செயல்முறையாகும். இது கொஞ்சம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. ஆனால் எனக்கு என்னுடைய 14 வீரர்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: 323 ரன்ஸ்.. 30வது வருடமாக வெ.இ’ஸை ஊதிதள்ளிய நியூஸிலாந்து.. மிகப்பெரிய சாதனை வெற்றி

“தற்போது அவர்கள் என்னைக் காப்பாற்றுகிறார்கள். இருப்பினும் நான் வெடிக்கும் நாளன்று என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். எனவே நான் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்கிறேன். அதே போல நீங்களும் உங்களுடைய தேர்வுகளில் சறுக்கினால் அதற்காக பள்ளியை விட்டு போய்விடலாமா? கூடாது. மீண்டும் நீங்கள் கடினமாக உழைத்து மதிப்பெண்கள் பெற வேண்டும். அதையே நானும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கம்பேக் கொடுப்பதற்காக முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -