323 ரன்ஸ்.. 30வது வருடமாக வெ.இ’ஸை ஊதிதள்ளிய நியூஸிலாந்து.. மிகப்பெரிய சாதனை வெற்றி

Nz vs wi 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்து வென்றது. இறுதியாக வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி மௌன்ட் மௌங்கனி மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 575/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் கேப்டன் லாம் லாதம் சதமடித்து 137, டேவோன் கான்வே இரட்டை சதமடித்து 227 ரன்கள் குவித்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஆண்டர்சன் பிலிப் 2, ஜஸ்டின் க்ரிவ்ஸ் 2, ஜெய்டேன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

30வது வருடமாக வெ.இ ஏமாற்றம்:

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முடிந்தளவு போராடியும் 420 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 63, காவெம் ஹோட்ஜ் சதமடித்து 123* ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி அஜாஸ் பட்டேல் விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக 155 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூசிலாந்து 2வது இன்னிங்ஸில் 306/2 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் மீண்டும் சதமடித்து 101, டேவோன் கான்வே 100 ரன்களை குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு காவெம் ஹோட்ஜ் 2 விக்கட்டுகள் சாய்த்தார். இறுதியில் 462 என்ற பெரிய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் முன்பை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நியூஸிலாந்து பெரிய வெற்றி:

அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் கிங் 67 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 5, அஜஸ் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 393 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை (393 ரன்கள்) பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: அந்த தோல்வியால் கிரிக்கெட்டையே விட்டு போய்டலாம்ன்னு நினச்சேன்.. கம்பேக் கொடுத்தது பற்றி ரோஹித் பேட்டி

இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஹமில்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்ததே முந்தைய பெரிய வெற்றியாகும். மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தங்களது பெரிய தோல்வியை சந்தித்தது. அத்துடன் 1995க்குப்பின் தொடர்ந்து 30வது வருடமாக நியூசிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் சோகத்துடன் கிளம்பியது.

Advertisement