
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கடந்த சில மாதங்களாகவே குடலிறக்க பிரச்சனையால் ஏற்பட்ட ஹரினியா ஆபரேஷனை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் அவர் ஹெர்னியா பிரச்சனையிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்தால் மட்டுமே அவரால் அந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட முடியும் என்று தெரிகிறது.
கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது முதல் முறையாக ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணியின் கேப்டனாக திரும்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவர் சென்றுள்ளதாகவும் அங்கு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இன்னும் ஒரு மாத காலமே இடைவெளி இருப்பதினால் இந்த நேரத்தில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு தனது முழு உடற்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப முடியும்.
இதன் காரணமாக தற்போது அவர் முழு வீச்சில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஹெர்னியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போது இந்த பிரச்சனையிலுருந்து முற்றிலுமாக மீண்டு சற்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் அவர் விரைவில் தனது உடற்தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து புதிய டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : இளம் இந்திய அணி அசத்திடாங்க.. இதே மாதிரி 2010இல் நாங்க ஒரு த்ரில்லர் மேட்ச் ஜெய்ச்சோம்.. கிர்ஸ்டன் மகிழ்ச்சி
அதனால் அவரே ஆசிய கோப்பை இந்திய அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதால் இந்த டி20 ஆசிய கோப்பையையும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.