இளம் இந்திய அணி அசத்திடாங்க.. இதே மாதிரி 2010இல் நாங்க ஒரு த்ரில்லர் மேட்ச் ஜெய்ச்சோம்.. கிர்ஸ்டன் மகிழ்ச்சி

Gary Kirsten
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும் என்று அனைவரும் நம்பினார்கள். ஏனெனில் கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்த இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இருப்பினும் கடைசி நாளில் அமர்க்களமாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்று திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. அதனால் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் கில், கம்பீர் வழிகாட்டுதலில் இங்கிலாந்தில் இந்திய அணி சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக கேரி கிர்ஸ்டன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:

மேலும் தம்முடைய பயிற்சியில் மொஹாலியில் நடைபெற்ற 2010 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை த்ரில்லாக இந்தியா தோற்கடித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி தொடரை சமன் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. கம்பீருக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எனக்குத் தெரியும்”

“கம்பீர் சாதித்ததில் மகிழ்ச்சி. இளம் இந்திய அணியின் வெற்றியில் நாம் அனைவருக்குமே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பது உற்சாகமாக இருக்கும். ஒருமுறை இஷாந்த் சர்மா 48 பந்துகளை எதிர்கொண்டு விவிஎஸ் லக்ஷ்மனுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்றார்”

- Advertisement -

2010 மொஹாலி த்ரில்லர்:

“அதுவே இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக என்னுடைய 3 வருட காலத்தில் நிகழ்ந்த ஹைலைட்டான வெற்றியாகும். இஷாந்த் சர்மாவுடன் வேலை செய்தது எனது பயிற்சியின் ஒரு ஹைலைட்டாகும். ஏனெனில் அதுவரை நம்மால் பேட்டிங் செய்ய முடியும் என்பது அவருக்கே தெரியாமல் இருந்தது. இப்போதும் அவரால் நன்றாக பேட்டிங் செய்ய முடிவதில்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் வெற்றியைப் பெருமளவுக்கு நாங்கள் அவருடைய பேட்டியில் வேலை செய்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா ஏமாத்தி ஜெய்ச்சுடாங்க.. ஐசிசி அதை சோதிக்கனும்.. பாகிஸ்தான் வீரரின் வினோத புகார்.. ரசிகர்கள் பதிலடி

2010 மொஹாலி டெஸ்ட் போட்டியில் 216 ரன்களை துரத்திய இந்தியா 124/8 என ஆரம்பத்திலேயே சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது நங்கூரமாக விளையாடிய லக்ஷ்மனுடன் சேர்ந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷாந்த் சர்மா 31 ரன்களை குவித்து சரிவை சரி செய்தார். கடைசியில் பிரக்யான் ஓஜாவுடன் சேர்ந்து அசத்திய லக்ஷ்மன் 73* (79) ரன்கள் அடித்து இந்தியாவை வெறும் 1 விக்கெட் வித்யாசத்தில் த்ரில்லாக வெற்றி பெற வைத்தது மறக்க முடியாது.

Advertisement