இந்தியா ஏமாத்தி ஜெய்ச்சுடாங்க.. ஐசிசி அதை சோதிக்கனும்.. பாகிஸ்தான் வீரரின் வினோத புகார்.. ரசிகர்கள் பதிலடி

Pakistan Player
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி சமன் செய்தது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற அத்தொடரில் கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் நிச்சயம் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது.

குறிப்பாக முகமது சிராஜ் மட்டும் கடைசி நாளில் 3 விக்கெட்டுகளை எடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்தார். அதே போல பிரசித் கிருஷ்ணாவும் கடைசி நாளில் 1 விக்கெட் எடுத்து மொத்தமாக 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா மிராக்கிள் வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

வினோத புகார்:

அந்த வகையில் தோல்வியின் விளிம்புக்கே சென்ற இந்தியா அதற்காக மனம் தளராமல் போராடி வென்றது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ஓவல் போட்டியின் கடைசி நாளில் இந்தியா ஏமாற்றி இங்கிலாந்தை வீழ்த்தியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷபீர் அஹ்மத் கான் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது இந்திய பவுலர்கள் ஸ்விங் பெறுவதற்காக பந்தின் மேலே வாஸ்லைன் க்ரீம் பயன்படுத்தியதாக அவர் வினோதமான புகார் செய்துள்ளார்.

எனவே ஐசிசி அந்த பந்தை பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் சென்று பரிசோதிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியா வாஸ்லைன் பயன்படுத்தியுள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் 80+ ஓவர்கள் பயன்படுத்தப்பட்ட பின்பும் பந்து கடைசி நாளில் புதிது போல இருந்தது”

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

“நடுவர் அந்த பந்தை பரிசோதனை கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக 10 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருடைய கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கோபமான பதிலடிகளைக் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சூதாடுவது முதல் பந்தை சேதப்படுத்துவது வரை குறுக்கு வேலை அனைத்தும் பாகிஸ்தானுக்கே கைவந்த கலை என்று அவருக்கு ரசிகர்கள் பதிலடி தருகிறார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவை ஜெய்க்க வைக்கும் எண்ணத்துடன் கம்பீர் அதை செய்யல.. முன்னேறல்லனா நீடிக்க முடியாது.. டிகே விமர்சனம்

ஒரு போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி பந்தை தன்னுடைய வாயால் கடித்து சேதப்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. அது போல இந்தியர்கள் யாரும் செய்ய மாட்டோம் என்று அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மேலும் சட்டவிரோத பவுலிங் ஆக்சனுடன் பந்து வீசியதால் ஐசிசியிடம் ஒரு வருடம் விளையாட தடைப்பெற்ற நீங்கள் இந்தியாவை பற்றி பேச தகுதியற்றவர்கள் என்றும் அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement