- Advertisement -
ஆசிய கோப்பை

இதான் இந்தியா – பாகிஸ்தானுக்கு உள்ள வித்தியாசம்.. ஜென்டில்மேன்ஷிப் பற்றி கேப்டன் சூரியகுமார் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முன்னதாக காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார். அதற்கு பதிலடியாக லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் இந்திய அணியினர் வெளியேறினர்.

அதற்கு இந்தியா ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அதற்காக சூப்பர் 4 போட்டியில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் பேட்டை வைத்து இந்தியாவை சுடுவது போல் கொண்டாடி கிண்டலடித்தார். அதே போல 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையாக செய்து காட்டி இந்திய ரசிகர்களை கலாய்த்தார்.

- Advertisement -

இதாங்க வித்தியாசம்:

மறுபுறம் தொடர்ந்து கை கொடுக்காமல் புறக்கணித்த இந்தியா களத்தில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை இறுதிப் போட்டியிலும் தோற்கடித்து கோப்பை வென்றது. இந்நிலையில் பாகிஸ்தானைப் போல இந்திய வீரர்கள் யாரும் அந்நாட்டவர்களை கிண்டல் செய்யும் வகையில் சைகை செய்யவில்லை என்று கேப்டன் சூரியகுமார் கூறியுள்ளார். அதுவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள வித்தியாசம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் பற்றி சூரியகுமார் பதிலளித்தது பின்வருமாறு. “அங்கே வித்தியாசம் இருக்க வேண்டும். இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் செய்கைகளை செய்ததில்லை, கைகளால் எதையும் பழித்து காட்டவில்லை”

- Advertisement -

சூரியகுமார் கருத்து:

“நாங்கள் விளையாட்டை கண்ணியத்துடன் விளையாட விரும்புகிறோம். அவர்கள் வெளிப்புறத்தில் கருத்துக்களை சொல்ல விரும்புகின்றனர். முடிவு எந்த அணிக்கு சாதகமாகவும் செல்லலாம். ஆனால் மீண்டும் வரும் போது நீங்கள் வெளிப்படுத்திய முயற்சிகளால் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். வெளியில் இருக்கும் மக்கள் அணிக்குள் நிறைய நடக்கிறது என்று சொல்வார்கள்”

இதையும் படிங்க: டெஸ்ட் தொடருக்கான டீமில் இருந்தாலும் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட வாய்ப்பு – விவரம் இதோ

“ஆனால் அணிக்குள் அனைத்து உணர்வுகளையும் புறம் தள்ளி விட்டு நல்ல விளையாட்டை விளையாடுங்கள் என்றே இந்திய வீரர்களிடம் நான் தெரிவித்தேன். அதன் பயனாக வரும் அனைத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அத்துடன் உலகின் மிகப்பெரிய வாரியமாக திகழும் பிசிசிஐ இந்திய அணி வெற்றிகரமாக செயல்படுவதற்கு அனைத்து ஆதரவையும் உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். எனவே ஆசியக் கோப்பையை வெல்வதற்கு பிசிசிஐ முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -