இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்தார். அதன் பின்னர் தற்போது அடுத்ததாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடமாட்டார் :
இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தற்போது அகமதாபாத் சென்று பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதுகுறித்த தகவலும் தற்போது அதிகளவில் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நிர்வாகமானது ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு முக்கியமான போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைத்து வருகிறது. அதுமட்டும் இன்றி தேவையான போது அவருக்கு ஓய்வையும் வழங்கி வந்தது.
அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய அவர் ஆசிய கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடியிருந்தார். அதோடு ஆசிய கோப்பை தொடரில் அவர் 2 போட்டியில் மட்டுமே ஓய்வெடுத்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் முடிந்த சில தினங்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரானது நடைபெறவுள்ளதால் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியின் போது பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் 17 விக்கெட் எடுத்து அசத்த இதுவே காரணம் – குல்தீப் யாதவ் பேட்டி
அப்படி அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுக்கும் பட்சத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அப்படி முதல் போட்டியை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தவறவிடும் பட்சத்தில் பிரசித் கிருஷ்ணா அவருக்கு பதிலாக முகமது சிராஜுடன் இணைந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.



