ஆசிய கோப்பை தொடரில் 17 விக்கெட் எடுத்து அசத்த இதுவே காரணம் – குல்தீப் யாதவ் பேட்டி

Kuldeep Yadav
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த அவருக்கு 5 போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆசிய கோப்பை தொடரில் நான் அசத்த இதுவே காரணம் : குல்தீப் யாதவ்

அதன்பிறகு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்த அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்து இந்த தொடரின் 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக முதலிடத்தை பிடித்தார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இப்படி ஆசிய கோப்பை தொடரில் அசத்தலாக செயல்பட்டு 17 விக்கெட் எடுக்க என்ன காரணம்? என்பது குறித்து பேசிய குல்தீப் யாதவ் கூறுகையில் : நான் கடந்த பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் என்னுடைய ரிதத்தை பிடிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

எனவே ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியில் விளையாடியது இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட உதவியது. ஆசிய கோப்பை தொடரில் என்னுடைய ரோல் என்னவென்றால் மிடில் ஓவர்களின் போது ரன்களை குறைவாக வழங்கி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

- Advertisement -

கேப்டனும் என்மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நான் என்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளதாக நினைக்கிறேன். எப்பொழுதுமே நான் இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் இலக்கு வைத்து விட்டால் அதை நோக்கி ஓட வேண்டிய அவசியம் ஏற்படும்.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கை காபி எல்லாம் அடிக்கல.. இதுதான் அவரோட நேச்சுரல் ஸ்டைல்.. ஷிவம் துபே குறித்து – சிறுவயது கோச் பேட்டி

ஆனால் நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை என்னுடைய அணியின் வெற்றிக்காக வழங்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து விளையாடுகிறேன். அதன் காரணமாகவே இந்திய அணியின் வெற்றிகளில் என்னால் பங்களிக்க முடிகிறது என்றும் குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement