யுவ்ராஜ் சிங்கை காபி எல்லாம் அடிக்கல.. இதுதான் அவரோட நேச்சுரல் ஸ்டைல்.. ஷிவம் துபே குறித்து – சிறுவயது கோச் பேட்டி

Shivam Dube
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி துரத்துகையில் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்திருந்தாலும் அவருக்கு இணையாக ஷிவம் துபே 33 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். திலக் வர்மாவுடன் ஷிவம் துபே அமைத்த பார்ட்னர்ஷிப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

யுவ்ராஜ் சிங்கை ஷிவம் துபே காபி அடிக்கவில்லை : சிறுவயது பயிற்சியாளர்

ஏனெனில் 77 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த போது ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிவம் துபே – திலக் வர்மா இணை 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருந்தனர். பேட்டிங்கில் 22 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 33 ரன்கள் குவித்த வேளையில் பந்துவீச்சிலும் மூன்று ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

- Advertisement -

ஷிவம் துபேவின் இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் ஷிவம் துபே யுவ்ராஜ் சிங்கின் ஸ்டைலை காபி அடிக்கவில்லை என்றும் அவரது பேட்டிங் அவருடைய நேச்சுரல் ஸ்டைல் என்றும் அவரது சிறு வயது பயிற்சியாளான சமந்த் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : 17 வயது இருக்கும் போது ஷிவம் துபேவின் தந்தை அவரை என்னுடைய அகாடமிக்கு அழைத்து வந்தார்.

ஏற்கனவே அவர் சந்திரகாந்த் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சி எடுத்திருந்தாலும் 13 வயதிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார். பின்னர் 17 வயதில் அவர் என்னிடம் வந்தார். அவரை பார்க்கும் போது நல்ல உயரமாகவும், திடமாகவும் இருந்ததால் நான் அவரை ஒரு வேகப்பந்து வீச்சாளராக கொண்டுவர திட்டமிட்டேன். அதனால் அவருடைய பந்துவீச்சில் அதிகளவு கவனம் செலுத்துகிறேன். ஆனால் அவரோ நான் ஒரு ஆல்ரவுண்டாக விரும்புகிறேன் என்று என்னிடம் தெரிவித்தார்.

- Advertisement -

அதன் பின்னர் பேட்டிங் பயிற்சியிலும் நான் அவரை பார்க்கையில் அவரால் எளிதாக பெரிய பெரிய சிக்சர்களை அடிக்க முடிந்தது. அவருடைய உயரம் மற்றும் ரீச் ஆகியவை அவருக்கு பேட்டிங்கில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தன. அவருடைய சிக்ஸ் ஹிட்டிங் எபிலிட்டியை பார்க்கும்போது பலரும் யுவராஜ் சிங்குடன் அவரை ஒப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் ஷிவம் துபேவின் சிக்ஸ் ஹிட்டிங் திறமை என்பது இயற்கையாகவே அவருக்கு உள்ளது தான்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை ஜெயிச்சது மட்டும் போதாது.. எனக்கு அந்த கோப்பையையும் ஜெயிக்கனும் – திலக் வர்மா பேட்டி

அவருடைய மிகப்பெரிய ரீச்சும், அவருடைய உயரமும் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்க உதவுகின்றன. வெறும் சிக்ஸர்களை மட்டும் அடித்து பயிற்சி செய்யாமல் ஸ்ட்ரைக் ரொட்டேஷனிலும் ஷிவம் துபே அப்போதிலிருந்து உழைத்து வருகிறார். அவருடைய திறமை தாமதமாக தான் வெளிவந்துள்ளது என ஷிவம் துபே குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் சமந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement