ஆசிய கோப்பை ஜெயிச்சது மட்டும் போதாது.. எனக்கு அந்த கோப்பையையும் ஜெயிக்கனும் – திலக் வர்மா பேட்டி

Tilak Varma
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 53 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர் என 69 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

என்னுடைய அல்டிமேட் கோல் அதுதான் : திலக் வர்மா

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலை சந்தித்த வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதால் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடியது குறித்தும், தனது அடுத்த இலக்கு குறித்தும் திலக் வர்மா சில கருத்துக்களை ஒரு பிரத்தேக பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாட்டுக்காக விளையாடும்போது சரியான நேரத்தில் சரியான வாய்ப்பை நான் பெற்றேன்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பையை கைப்பற்ற முடியும் என்று உணர்ந்து சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடி நாட்டிற்காக வெற்றியை தேடி கொடுத்துள்ளதாக உணர்கிறேன். இறுதிப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் முன்னதாகவே விழுந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் நிறையவே பேசினர். ஆனால் அதற்கு நான் செவி கொடுக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று மட்டும் நினைத்து விளையாடினேன்.

- Advertisement -

என்னுடைய பேட்டால் தான் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதனை செய்து காண்பித்தேன். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றியில் என்னுடைய பங்கும் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் என்னுடைய மிகப்பெரிய இலக்கு அடுத்த டி20 உலக கோப்பையை கைப்பற்றுவது தான்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹார்டிக் பாண்டியா விலகல் – காரணம் என்ன?

ஏனெனில் 2011 உலகக் கோப்பை பார்க்கும்போது நான் கிரிக்கெட்டை விரும்ப துவங்கினேன். அதன் பின்னர் தொழில் முறையாக கிரிக்கெட்டையும் விளையாட ஆரம்பித்தேன். தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் நான் அடுத்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் அதுவே என்னுடைய அல்டிமேட் கோல் என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement