ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹார்டிக் பாண்டியா விலகல் – காரணம் என்ன?

Hardik Pandya
- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடரானது அக்டோபர் 2-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து ஹார்டிக் பாண்டியா விலகல் :

இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி அஹமதாபாத் நகரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும் நடைபெற இருக்கிறது. வரும் அக்டோபர் 14-ஆம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடரானது நிறைவுபெறும் வேளையில் அதற்கு அடுத்து இந்திய அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

- Advertisement -

அப்படி ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்லும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹார்டிக் பாண்டியா விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் போது இறுதி போட்டிக்கு முன்னதாக தொடை பகுதியில் காயமடைந்த ஹார்டிக் பாண்டியா இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார்.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது அவரது காயத்திற்கான சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் இன்னும் சில வாரங்கள் காயத்திலிருந்து மீண்டுவர சிகிச்சை எடுத்துக் கொள்ள உள்ளதால் இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஒரு வாய்ப்பை தாருங்கள் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

ஒருவேளை காயம் அடுத்த மாதம் இறுதிக்குள் குணமடையும் பட்சத்தில் அவர் டி20 போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement