- Advertisement -
ஆசிய கோப்பை

ஜென்டில்மேனாக நின்ற பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் சென்றது ஏன்? இந்திய கேப்டன் சூரியகுமார் விளக்கம்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அப்போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியின் முடிவில் வழக்கம் போல பாகிஸ்தான் அணியினர் இந்திய அணிக்கு கை கொடுப்பதற்காக ஜென்டில்மேன்களாக நின்றனர்.

ஆனால் அவர்களுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே கை கொடுக்காமல் வெளியேறினார்கள். அத்துடன் கௌதம் கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவும் மற்ற இந்திய வீரர்களும் பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் தங்களுடைய பெவிலியனை அடைத்தனர். அதற்கு முன்பாகவே இந்திய கேப்டன் சூரியகுமார் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு கை கொடுக்கவில்லை.

- Advertisement -

கைகொடுக்காதது ஏன்:

அதனால் ஏமாற்றத்துடன் வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் இந்தியா புறக்கணித்தது.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ராணுவத்திற்கும் சமர்ப்பிப்பதாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். உயிரிழந்த இந்திய குடும்பங்களுக்கு தங்களுடைய அணி ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வந்தோமே தவிர நட்பு பாராட்ட வரவில்லை என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் விளக்கம்:

மேலும் இந்திய அரசு மற்றும் பிசிசிஐ பாகிஸ்தானுடன் விளையாட மட்டுமே தங்களிடம் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அதை செய்த இந்திய அணி உயிரிழந்த இந்திய மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அரசு மற்றும் பிசிசிஐ கச்சிதமாக சீரமைக்கப்பட்டனர். நாங்கள் இங்கே வந்து முடிவெடுத்தோம்”

இதையும் படிங்க: இந்தியாவின் மோசமான செயலுக்கு தான்.. பாகிஸ்தான் கேப்டன் அந்த பதிலடி கொடுத்தாரு.. மைக் ஹெசன் அதிருப்தி

“இங்கே விளையாடுவதற்காக மட்டுமே வந்த நாங்கள் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளோம். நமது வாழ்வில் சில விஷயங்கள் விளையாட்டின் நேர்மைத்தன்மைக்கு மேலானது என்று நான் கருதுகிறேன். நாங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக ஒற்றுமையாக நிற்கிறோம் என்று போட்டியின் முடிவிலேயே தெரிவித்திருந்தேன். அத்துடன் ஆப்ரேஷன் சிந்தூரில் பங்கேற்ற எங்களுடைய ராணுவத்தினருக்கும் நாங்கள் இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தேன். எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நாங்கள் இப்படி உத்வேகத்தைக் கொடுப்போம்” என்று கூறினார்

- Advertisement -