ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி துபாயில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா 15.5 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள்
கைகொடுக்காத இந்தியா:
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணிகளின் வீரர்களும் கையை கொடுத்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்திய மக்கள் இயற்கை எய்தினார்கள்.
அதற்கு பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பதிலடி கொடுத்தது வேறு கதை. அந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று இந்தியாவை சேர்ந்த பலரும் வந்திருக்கின்றனர். அதையும் தாண்டி இந்திய அரசின் ஆதரவுடன் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி மக்களுக்கு வெற்றியைப் பரிசளித்தது.
மோசமான செயல்:
அதே சமயம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க விரும்பிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்தியா கேப்டன் சூரியகுமார் கைகொடுக்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டியின் முடிவில் தொகுப்பாளரிடம் பேசாமல் சென்றார்.
இதையும் படிங்க: 2 முறை கைகொடுக்காமல் அவமானப்படுத்திய இந்திய அணி.. அதிருப்தியில் பாக் கேப்டன் செய்த பதிலடி செயல்
இந்நிலையில் இந்தியாவின் அந்த மோசமான சல்மான் ஆகா பேட்டி கொடுக்காமல் பதிலடி கொடுத்ததாக பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது. “நாங்கள் போட்டி முடிந்த பின் கை கொடுப்பதற்கு தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு எதிரணி தென்படாமல் தங்களுடைய உடைமாற்றும் அறைக்குள்ளயே இருந்து கொண்டனர். இது அவர்களிடமிருந்து மோசமான செயல். அதற்கு பதிலடியாகவே சல்மான் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்கவில்லை” என்று கூறினார்.



