- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட தவறை ஒத்துக்குறேன்.. சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணியை பார்த்து எனக்கு வலிக்கல.. சூரியகுமார் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை எழுப்பியது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏனெனில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கக்கூடிய சூரியகுமார் இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக செயல்படும் திறனை கொண்டிருப்பதாக ரெய்னா கூறியிருந்தார்.

- Advertisement -

எனக்கு வலிக்கல:

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தம்முடைய பெயர் இல்லாததை பார்த்து தமக்கு வலிக்கவில்லை என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தாம் சிறப்பாக செயல்படவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இது பற்றி இங்கிலாந்து தொடருக்கு முன் பேசியது பின்வருமாறு.

“நான் ஏன் வேதனைப்பட வேண்டும்? ஒருவேளை நான் நன்றாக விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்திருப்பேன். ஒருவேளை நான் நன்றாக செயல்படவில்லை எனில் அதை ஒப்புக் கொள்வது முக்கியம். அதே சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள அணியை நீங்கள் பார்க்கும் போது அதில் அனைவருமே நன்றாக செயல்பட கூடியவர்களாக இருக்கிறார்கள்”

- Advertisement -

டி20 ஸ்பெஷலிஸ்ட் மட்டுமே:

“இந்தியாவுக்காக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடியுள்ளார்கள். எனவே அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் நான் சிறப்பாக விளையாடியிருந்தால் அணியில் இருந்திருப்பேன். அதை செய்யாததால் மற்றொரு தகுதியான வீரர் அந்த இடத்தில் இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்.. இலவச ஒளிபரப்பு பற்றிய விவரங்கள்

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமாக விளையாடும் சூரியகுமார் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை. அதிலும் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் அவர் விளையாடிய ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -