இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் சூரியகுமார் யாதவ் தலைமையில் சமீபத்தில் இலங்கை, வங்கதேசம், தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது.
எனவே டி20 கிரிக்கெட்டில் இப்போதும் நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் சதங்களை விளாசிய சாம்சன், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அணிக்கு வலு சேர்கிறார்கள். முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரில் விளையாட உள்ளது இந்திய அணிக்கு மற்றொரு பலமாகும்.
இந்தியா – இங்கிலாந்து டி20:
மறுபுறம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவாகவே இருக்கிறது. அந்த அணியில் ஹரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே சொந்த மண்ணில் இந்திய அணிக்கு சவாலைக் கொடுக்கும் அணியாகவே இங்கிலாந்து இருக்கிறது.
அதனால் இந்த தொடரில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரின் 5 போட்டிகளும் முறையே கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் முறையே ஜனவரி 22, 25, 28, 31, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்துமே இரவு 7 மணிக்கு துவங்க உள்ளன.
நேரலை விவரங்கள்:
இந்தத் தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் வாயிலாக நேரடியாக கண்டுக்களிக்கலாம். குறிப்பாக தமிழக ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்க முடியும். அதே போல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஃஆப் வாயிலாக ஆன்லைனில் மொபைல் வாயிலாக கண்டுகளிக்க முடியும்.
இதையும் படிங்க: தவறை ஒத்துகிட்டு இந்தியா திருந்திட்டாங்க.. இதை உலகின் மற்ற நாடுகளும் ஃபாலோ பண்ணனும்.. இயன் ஹீலி
இது போக இந்த தொடர் முழுவதையும் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாகவும் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டு களிக்க முடியும். 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவருமே அந்த சேனலில் தான் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்திருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதும் அந்த சேனலில் ரசிகர்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக போட்டியை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



