சூரியகுமார் அதுல இன்னும் சாதிக்கல.. அவசரப்பட்டு 2023 உ.கோ சான்ஸ் கொடுக்காதீங்க.. அந்த வேலைய அவங்களே செய்வாங்க.. சேவாக் பேட்டி

Virender Sehwag 5
- Advertisement -

ஆசிய கோப்பையில் வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்று சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு தயாராகியுள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவிக்கும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். ஆனால் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

பொறுமையான வாய்ப்பு:
இருப்பினும் அணி நிர்வாகத்தின் ஆதரவால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 50 (49), 72* (37) ரன்கள் விளாசிய அவர் ஃபார்முக்கு திரும்பி ஒருநாள் கிரிக்கெட்டிலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டினார். அதிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்கிய அவர் 2023 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் முதல் வீரராக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சேவாக் எச்சரித்துள்ளார். மேலும் ஃபினிஷிங் வேலையை இஷான், பாண்டியா, ஜடேஜா போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே செய்யக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் இன்னும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. குறிப்பாக கடைசிக்கட்ட 15 – 20 ஓவர்களில் கிட்டத்தட்ட டி20 போட்டிக்கு நிகரான சூழ்நிலைகளை பயன்படுத்தி அவரால் அதிரடியாக விளையாட முடிகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே வேலையை ஹர்திக் பாண்டியா, இசான் கிசான், ராகுல் ஆகியோரும் செய்யும் திறமையை கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: நானா செல்பிஃஷ்? திமிர் இல்லாம சொல்றேன் எங்கள தாண்டி 2023 உ.கோ தொடுங்க – டிம் பெய்ன், எதிரணிகளுக்கு ஸ்டோக்ஸ் எச்சரிக்கை

“எனவே 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது உறுதியாகியுள்ள இந்த சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை 4வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் சதமடித்து அங்கேயும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை அவர் அணி நிர்வாகத்திற்கு காட்ட வேண்டும். எனவே எனவே தற்போதைக்கு அவர் அணியில் பொருந்த மாட்டார். ஒருவேளை தேவைப்பட்டால் 4வது இடத்தில் இசான் கிசான் இடது கை வீரராக இருப்பதால் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement