நானா செல்பிஃஷ்? திமிர் இல்லாம சொல்றேன் எங்கள தாண்டி 2023 உ.கோ தொடுங்க – டிம் பெய்ன், எதிரணிகளுக்கு ஸ்டோக்ஸ் எச்சரிக்கை

Ben Stokes Tim Paine
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து 2011 போல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு சவாலை கொடுக்கப்போகும் எதிரணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சமயத்தில் 20 ஓவர், 50 ஓவர் உலகக்கோப்பைகளை வென்ற அணியாக மாபெரும் சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் அணியாக உருவெடுத்துள்ளது.

- Advertisement -

ஸ்டோக்ஸ் எச்சரிக்கை:
போதாக்குறைக்கு 2019, 2022 ஆகிய 2 உலகக் கோப்பை ஃபைனல்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் அறிவித்த ஓய்வை வாபஸ் பெற்று களமிறங்க உள்ளது இங்கிலாந்துக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. அந்த நிலையில் 2022இல் ஓய்வு பெற்ற நீங்கள் திடீரென்று மற்ற வீரரின் வாய்ப்பைக் கெடுத்து உலக கோப்பையில் சுயநலத்துடன் விளையாட வருவதாக அவர் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நான் சுயநலவாதியா என்பது ரசிகர்களுக்கு தெரியும் என்று அவருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தாங்கள் வலுவான அணியாக இருப்பதால் 2023 உலக கோப்பையை மற்ற அணிகளால் எளிதில் தொட முடியாது என சொல்வதற்கு திமிர்த்தனம் தேவையில்லை என்று உலக அணிகளுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுக்கும் அவர் இது பற்றி கார்டியன் பத்திரிக்கையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் சுயநலவாதியா? அது எனக்கு பொருந்தாத வார்த்தை என மக்கள் அறியும் அளவுக்கு நான் விளையாடியுள்ளேன் என்று நினைக்கிறேன். ஆஷஸ்க்கு பின் எப்படி உணர்ந்தேன் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைய நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன். இருப்பினும் உலகக்கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பது பற்றி யோசித்த போது அது எனக்கு எளிதாக தெரிந்ததால் பட்லரிடம் சொன்னேன்”

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் குமார் சங்கக்காராவின் மாபெரும் சாதனையை சமன் செய்த – விராட் கோலி

“மேலும் நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம் என்பதை சொல்வது எனக்கு திமிர்த்தனமாக தெரியவில்லை. குறிப்பாக பெரிய போட்டிகளில் முக்கிய அணிகளை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் அனுபவம் இருக்கிறது என்று கருதுகிறேன். மேலும் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் விளையாடியதால் அங்குள்ள சூழ்நிலைகள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அந்த அணிக்கும் நாட்டுக்காக விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement