யாரையோ ட்ராப் பண்ணுங்க.. ஆனா 2023 உ.கோ தொடரில் எல்லா மேட்ச்லயும் அவர் விளையாடியே தீரணும் – ஹர்பஜன் அதிரடி கோரிக்கை

harbhajan Singh 4
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதிலும் ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது.

அத்துடன் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் பெரும்பாலான வீரர்கள் ஃபார்முக்கு திரும்பிய நிலையில் இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்து பின் தடுமாறிய கதைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரை விட ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சிக்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 50 (49), 72* (37) ரன்கள் குவித்து அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றி தம்மால் 50 ஓவர் போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:
தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் நினைத்துப் பார்க்க முடியாத ஷாட்டுகளை அடித்து பெரிய ரன்கள் குவிக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் அவருக்கு அணி தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

அதை பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஹட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது அவர் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்துள்ளார். அதனால் 2023 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் தடுமாறி வந்த அவரும் ஒரு வழியாக ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் அதற்காக உலகக்கோப்பை தொடரில் 11 பேர் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூரியகுமாருக்காக யாரை நீக்குவீர்களோ தெரியாது ஆனால் உலகக்கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் அதிரடியான கோரிக்கை வைத்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இதை எப்போவோ செஞ்சுருக்கணும்.. 37 வயசுல தான் நானே கத்துக்குறேன்.. லபுஸ்ஷேனை போல்டாக்கிய கேரம் பால் பற்றி அஸ்வின்

“சூரியகுமார் யாதவ் உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அதற்காக நீங்கள் யாரை நீக்கினாலும் நான் கவலைப்பட மாட்டேன். அவருடைய பெயர் தான் அணியில் முதலாவதாக இருக்க வேண்டும் மற்ற பெயர்கள் அடுத்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற தனி ஒருவனாக வெற்றியை உங்கள் பக்கம் திருப்பக்கூடிய மேட்ச் வின்னர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அவர் ஒரு துருப்பு சீட்டு. மேலும் நாம் பேசும் ஃபினிஷர் வேலையை அவர் செய்யக்கூடிய திறமை கொண்டவர். அவர் 5வது இடத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement