3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் தேவையில்லாத மாற்றத்தை செய்த சூரியகுமார் யாதவ் – என்ன ஆகப்போகுதோ?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த 2 போட்டியிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நவம்பர் 28-ஆம் தேதியான இன்று காவுஹாத்தி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் இந்திய அணி செய்துள்ளது.

அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. ஒருவேளை இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நிச்சயம் அடுத்த இரண்டு போட்டியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் ஆவேஷ் கானுக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நமக்கு அது போதாதா? விளையாட்டா மட்டும் பாருங்க.. 2023 உ.கோ பற்றி கபில் தேவ் கருத்து

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஆவேஷ் கான், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement