நமக்கு அது போதாதா? விளையாட்டா மட்டும் பாருங்க.. 2023 உ.கோ பற்றி கபில் தேவ் கருத்து

Kapil Dev 3
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பையை இந்தியா 2011 போல வென்று சாதனை படைக்கும் என்று அனைத்து ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

அதற்கேற்றார் போல் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அசத்திய இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அந்த வகையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஃபைனலில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இது போதாதா:
இந்நிலையில் 10 வெற்றிகளை தொடர்ச்சியாக பெறும் அளவுக்கு 2023 உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பாகவே விளையாடியதாக கபில் தேவ் தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பார்த்து அதிகப்படியான எதிர்பார்ப்பையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அதிகப்படியான நம்பிக்கை வைக்காதீர்கள். இறுதியில் அது நெஞ்சங்களை உடைக்கலாம். நாம் சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் மற்ற அணிகளும் உலகக் கோப்பையை வெல்வதற்காகவே இந்தியாவுக்கு வந்தன. அதனால் இந்திய அணி மீது நாம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களை மதிக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் இங்கே நாம் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறோம். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு தான் தற்போது எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பது தெரியும். ஒருவேளை இந்தியா வென்றால் அது நல்ல உணர்வை கொடுக்கும். மேலும் வெற்றி பெற்ற அணியில் கூட சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை நீங்கள் திருத்துவதே சரியானதாகும். இத்தொடரில் இந்தியா 10 வெற்றிகளை பெற்றது. அது போதாதா? மற்ற அணிகளையும் நாம் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: 3வது டி20யில் திடீரென லீவ் போட்ட முகேஷ் குமார்.. பிசிசிஐ அறிவிப்பை கேட்டு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

“நமது அணி நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்களா இல்லையா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வகையில் நமது அணி நல்ல கிரிக்கெட்டை விளையாடியது. ஆனால் ஃபைனல் நாள் மட்டும் நமக்கானதாக அமையவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற அணிகளையும் பார்க்க வேண்டும். குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்ததை கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement