2023 உ.கோ அணியில் இடம் பிடிக்க சூர்யகுமார் ரொம்ப லக்கி, பேசாம அவர செலெக்ட் பண்ணிருக்கலாம் – இளம் வீரர் பற்றி டாம் மூடி பேட்டி

Tom Moody 3
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவின் அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்காக 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக விளையாடப் போகும் 15 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இருக்கும் அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்த பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோரிடம் பிடித்துள்ளது இந்திய அணியை வலுப்படுத்துகிறது.

இருப்பினும் இந்த அணியில் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிருப்தியாகவும் அமைந்தது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி பவுலர்கள் எப்படி பந்து பேசினாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

லக்கி சூர்யகுமார்:
ஆனால் சற்று நிதானத்துடன் விளையாடி வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 24.33 என்ற சுமாரான சராசரியிலேயே பேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் அப்படி சுமாராக செயல்பட்டும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க சூரியகுமார் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி அவருக்கு பதிலாக திலக் வர்மாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அவர் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் மிடில் ஆர்டரில் அசத்தக்கூடிய இடது கை பேட்ஸ்மேனாக அசத்தும் திறமையுடன் சில ஓவர்கள் பந்து வீசக்கூடிய திலக் வர்மா அவரை விட சிறந்த வீரராக இருக்கிறார். எனவே திலக் வர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் இருப்பது அடிக்கடி கேப்டன் ரோகித் சர்மா சொல்வது போல் இந்திய அணியில் வளைவுத்தன்மையை ஏற்படுத்துவதற்கு உதவும்” என்று கூறினார்.

- Advertisement -

இருப்பினும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்படுவதற்கான காரணத்தை அதே நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர் விளக்கியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்திய மேஜிக்கிற்கு பின் சூரியகுமாரை அணி நிர்வாகம் உலகக் கோப்பையில் தேர்வு செய்ததில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை. மேலும் அழுத்தமான பெரிய போட்டிகளில் தரமான டி20 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் என்பதே சூரியகுமாரின் ஸ்பெஷலாகும்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் நெருங்க கூட முடியாது, அவர் தான் இப்போ நம்ம அணியில் 2 இன் ஒன் பிளேயர் – இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

“அத்துடன் உலகக் கோப்பையில் டி20 போல விளையாட வேண்டிய ஒரு சமயம் ஏற்பட்டால் சூரியகுமார் யாதவ் நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் திறமையைக் கொண்டுள்ளார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல புள்ளிவிவரங்களை வைத்திருக்கவில்லை என்றாலும் உலக கோப்பையில் அசத்தக்கூடிய பொறுமை அவருக்கு வரும் என்று உறுதியாக நம்பலாம்” என கூறினார்.

Advertisement