சஞ்சு சாம்சன் நெருங்க கூட முடியாது, அவர் தான் இப்போ நம்ம அணியில் 2 இன் ஒன் பிளேயர் – இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

Ravindra Jadeja Sanju Samson
Advertisement

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு தயாராகுமாக நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி அசத்தியுள்ளது. முன்னதாக ரிசப் பண்ட் காயமடைந்ததால் இந்த உலக கோப்பையிலாவது சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அவர் தடுமாறிய நிலையில் துவக்க வீரராக அசத்திய இசான் கிசான் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து அசத்தினார்.

அதனால் ஆசிய கோப்பையில் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் பெரும்பாலும் துவக்க வீரராக களமிறங்கியே வெற்றிகரமாக செயல்பட்டதால் மிடில் ஆர்டரில் சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் 66/4 சரிந்ததால் என தடுமாறிய இந்தியாவை பாண்டியாவுடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றிய அவர் 266 என்ற நல்ல இலக்கை நிர்ணிப்பதற்கு உதவினார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
அதனால் தம்மால் அனைத்து இடங்களிலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்த அவர் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையும் தீர்ப்பதற்கு தகுந்தவராக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சனை விட ஓப்பனிங் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு பேக்-அப் வீரராக இரட்டை வேலையை செய்யக்கூடிய திறமை கொண்ட இசான் கிசான் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையையும் போக்கும் தன்மை கொண்டிருப்பதாக பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புது இசான் கிசான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கிடையே எந்த போட்டியும் இல்லை. ஏனெனில் இஷான் கிசான் பல தூரங்கள் முன்னே சென்று விட்டார். பொதுவாக நீங்கள் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் போது நிச்சயமாக பேக்-அப் விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். சொல்லப்போனால் ரஞ்சிக் கோப்பையில் கூட ஒரு அணிக்கு நாம் 2 விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுப்போம்”

- Advertisement -

“இது போன்ற நிலைமையில் இசான் கிசான் பேக்-அப் துவக்க வீரராகவும் பேக்-அப் விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். அந்த வகையில் அவர் 2 வேலைகளை செய்யும் ஒரு வீரராக இருக்கிறார். அதிலும் தற்போது 5வது இடத்தில் அசத்தியுள்ள அவர் மிடில் ஆடரில் ரவீந்திர ஜடேஜாவுடன் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த நிலைமையில் சமீப காலங்களாகவே மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்று பேசிய பலரும் இசான் கிசானால் 5வது இடத்தில் விளையாட முடியாது என்று தெரிவித்தார்கள்”

இதையும் படிங்க: இது கூட இந்தியாவின் சதின்னு சொல்விங்களே? பாகிஸ்தான் வாரியத்தின் சொதப்பலை கலாய்த்த ரசிகர்கள் – நடந்தது என்ன

“ஆனால் அவர் தற்போது அங்கேயும் விளையாடி சாதித்துள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல சஞ்சு சாம்சனை விட ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் போன்ற 3 வேலைகளை செய்யக்கூடிய திறமை கொண்டிருப்பதாலேயே இஷான் கிசான் இந்தியாவுக்காக விளையாடும் 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement