இது கூட இந்தியாவின் சதின்னு சொல்விங்களே? பாகிஸ்தான் வாரியத்தின் சொதப்பலை கலாய்த்த ரசிகர்கள் – நடந்தது என்ன

Pakistan Floddlight
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்று துவங்கியுள்ளது. அதில் செப்டம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தானின் கடாஃபி நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹீம் 64 ரன்களும் கேப்டன் சாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்டுகளையும் நாசிம் ஷா 3 விக்கெட்டுகளின் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 20 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 17 ரன்களும் எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இமாம்-உல்-ஹக் 78 ரன்களும் முகமது ரிஸ்வான் 63* ரன்களும் எடுத்து 39.3 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் சதியா:
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் சேசிங்கை துவங்கிய போது மாலை நேரம் வந்ததால் ராட்சத மின்விளக்குகள் வழக்கம் போல ஒளிர விடப்பட்டன. இருப்பினும் பாகிஸ்தான் 5 ஓவர்கள் எட்டிய போது மைதானத்தை சுற்றி இருந்த 6 ராட்சத மின்விளக்குகளில் 2 திடீரென்று அணைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அதனால் சற்று நேரம் தாமதத்திற்கு பின் மீண்டும் துவங்கிய அந்த போட்டி ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது.

அதை பார்த்த இந்திய ரசிகர்கள் இதற்கும் இந்தியா தான் சதி செய்தது என்று மற்றும் விமர்சித்து விடாதீர்கள் என பாகிஸ்தானை கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் இதே தொடரில் அனைத்து அணிகளும் அணிந்து விளையாடும் ஜெர்சியில் ஆசிய கவுன்சிலின் லோகோவுக்கு கீழ் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை என்றும் அதற்கு ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் இந்தியாவின் ஜெய் ஷா தான் காரணம் என்று ரசித் லத்தீப் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

அத்துடன் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகளை வேண்டுமென்றே அரசியல் செய்து இலங்கைக்கு மாற்றியதாகவும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தினந்தோறும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதில் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு சரியான ரன் ரேட் கொடுக்கப்படாத குளறுபடி ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேசாம நேபாளுக்கு எதிரா மேட்ச் அரேஞ்ச் பண்ணுங்க, பாபர் அசாமை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – மோசமான புள்ளிவிவரம் இதோ

தற்போது 3வது போட்டியில் மின்விளக்குகள் அணைந்ததால் ஒருவேளை மொத்த ஆசிய கோப்பையும் பாகிஸ்தானில் நடத்தியிருந்தால் இன்னும் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் இந்திய ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். இந்த நிலைமையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் எந்தளவுக்கு வெற்றிகரமாக நடத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement