அவரை மாதிரி தனித்துவ பிளேயர பாத்ததே இல்ல.. சிம்பிளா வேற லெவல் திறமை வெச்சுருக்காரு – இந்திய வீரரை பாராட்டிய மார்க் வாக்

Mark Waugh
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 ஐசிசி உலக கோப்பையை சொந்த மண்ணில் வெல்வதற்காக இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாமலேயே கேஎல் ராகுல் தலைமையில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்து தடுமாறி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதை விட ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கிண்டல்களுக்கு உள்ளான சூரியகுமார் யாதவ் ஒரு வழியாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் 50 (49), 72* (37) ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

தனித்துவமான வீரர்:
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவிக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். ஆனால் சற்று பொறுமையாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை.

இருப்பினும் அணி நிர்வாகத்தின் ஆதரவால் கடந்த மார்ச் மாதம் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்று காட்டியுள்ளார். இந்நிலையில் வித்யாசமான ஷாட்களை அடிக்கும் தனித்துவமான திறமை கொண்ட சூரியகுமார் போன்ற வீரரை இதற்கு முன் பார்த்ததில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வாக் ஜியோ சினிமா சேனலில் பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் முற்றிலும் தனித்துவமானவர். வித்தியாசமான இடங்களில் பந்தை அடிப்பதில் அவரைப் போன்ற வீரரை எப்போதும் பார்த்ததில்லை. குறிப்பாக ஃபீல்டர்கள் இல்லாத இடத்தில் அடிப்பதே அவருடைய உண்மையான திறமையாகும். அது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் அடிப்பதற்கு தனித்துவமான திறமை வேண்டும். அவரால் ஃபீல்டிங்கை மாற்றி இடைவெளிகளை கண்டறிய முடிகிறது”

இதையும் படிங்க: முடிஞ்ச 4 மாச சம்பளம் பாக்கி எப்போ தருவீங்க.. கோபத்தில் 2023 உ.கோ தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடி முடிவு – வெளியான தகவல்

“மேலும் 2வது போட்டியில் களமிறங்கிய சூழ்நிலை அவருக்கேற்றார் போல் அமைந்தது. ஏனெனில் கடைசி 10 ஓவர்களில் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலையில் களமிறங்கும் வாய்ப்பை அவர் பெற்றார். அத்துடன் மைதானத்தின் சிறிய பவுண்டர்களில் அவர் அதிகமாக ரன்கள் அடித்தார். பொதுவாக அவர் ஸ்கொயர் திசையில் அடிப்பதை நாம் பார்ப்போம். ஆனால் இன்று மிட் ஆஃப் மற்றும் கவர்ஸ் திசையில் அவர் அடித்ததை பார்த்தது மிகவும் கவர்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement