முடிஞ்ச 4 மாச சம்பளம் பாக்கி எப்போ தருவீங்க.. கோபத்தில் 2023 உ.கோ தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடி முடிவு – வெளியான தகவல்

Pakistan team
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐசிசி 2023 உலகக்கோப்பையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பையில் தங்களுடைய நாட்டிற்கு வராமல் புறக்கணித்த இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து விடாப்பிடியாக பேசி வந்தது.

இருப்பினும் ஆசிய கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இருந்ததால் அந்த விவாகரத்தில் எதுவும் செய்ய முடியாத பாகிஸ்தான் ஒருவேளை இந்த உலகக்கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணத்தை இழக்க நேரிடும். அதன் காரணமாக வேறு வழியின்றி இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் வாரியம் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அந்நாட்டு வீரர்கள் 2016 டி20 உலகக் கோப்பைக்கு பின் முதல் முறையாக இந்தியாவில் விளையாட வருகின்றனர்.

- Advertisement -

சம்பள பாக்கி:
இந்நிலையில் பாகிஸ்தான் வாரிய சம்பள ஒப்பந்தப்படி அந்நாட்டு வீரர்களுக்கு மாத மாதம் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி கடந்த 4 மாதங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்கு முழுமையான சம்பளத்தை அந்நாட்டு வாரியம் வழங்காமல் இருந்து வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்பான்சர்ஷிப் நிறுவனத்தினர் ஒப்பந்தப்படி செய்து கொண்ட பணத்தை பாகிஸ்தான் வாரியத்திற்கு கொடுக்கவில்லை என்று தெரிய வருகிறது.

அதன் காரணமாக தங்களுடைய வீரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக அந்நாட்டு வாரியம் சம்பளம் கொடுக்கவில்லை என்று கிரிக்கெட் பாகிஸ்தான் எனும் பிரபலமான இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக ஏமாற்றமடைந்துள்ள பாகிஸ்தான் வீரர்கள் 2023 உலகக் கோப்பையில் ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களின் பெயர் மற்றும் லோகோவை தங்களுடைய ஜெர்ஸியில் அணிந்து விளையாட போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

இது பற்றி அந்த இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத வீரர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பாகிஸ்தானுக்காக இலவசமாகவே விளையாட தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்காக வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் லோகோவை ஏன் நாங்கள் அணிந்து விளையாட வேண்டும். அதே போல அவர்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்தும் வேலைகளையும் நாங்கள் செய்யப் போவதில்லை. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் ஐசிசி விளம்பரங்களில் கூட நாங்கள் இருக்கப்போவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தமுறை 50 ஓவர் உலககோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் – மைக்கல் வாகன் கருத்து

முன்னதாக வாரிய ஒப்பந்தப்படி அந்நாட்டு வீரர்களுக்கு 4.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதில் வருமான வரி போக 2.2 – 2.3 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே கிடைப்பதால் அது போதாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு வாரியத்திடம் சம்பள உயர்வு கேட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement