- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டனே இப்படி சொன்னா யார் தான் அசத்த மாட்டாங்க.. சூரியகுமார் கேப்டன்ஷிப் பற்றி அக்சர் படேல் பேட்டி

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஜூலை 27ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக 214 ரன்களை துரத்திய இலங்கை ஒரு கட்டத்தில் 140/1 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்றதால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது அனலாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றி கண்டது. அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

பவுலர்களின் கேப்டன்:
இந்நிலையில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலர்களுக்கு அதிகமான ஆதரவை கொடுப்பதாக அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தாலும் அவர் தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். அப்படி கேப்டனே ஆதரவு கொடுப்பது இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கிடைப்பதாகவும் அக்சர் படேல் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யா பாய் தலைமையில் கடந்த வருடம் நான் ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாடியுள்ளேன். அவர் பவுலர்களின் கேப்டன் என்பதை நான் அறிவேன். அவர் முதலில் உங்களுடைய முடிவை எடுப்பதற்கு தேவையான சுதந்திரத்தை கொடுக்கிறார். நீங்கள் அடி வாங்கும் போது அவர் உங்களிடம் வந்து அது நல்ல பந்து என்று சொல்கிறார். அதே சமயம் தொடர்ந்து உள்ளீடுகளையும் வழங்குகிறார்”

- Advertisement -

“அந்த வகையில் ஒரு வீரராக அவரிடம் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருடன் நான் 5 போட்டிகளில் விளையாடினேன். அதைத் தொடர்ந்து அவருடன் இப்போது விளையாடும் போது பெரிய மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முதல் 3 ஓவர்களில் நாங்கள் ரன்களை கொடுத்த போது அவர் என்னிடம் நாம் இதை செய்வோம் அல்லது அதை செய்தால் விக்கெட் எடுக்க முடியும் என்பது பற்றி சொல்லினார்”

இதையும் படிங்க: 10 வருசமா விளையாடுறேன்.. கேப்டன் – கோச் மாறினாலும் அது மட்டும் மாறல.. அக்சர் படேல் பேட்டி

“அதை செய்து பவுண்டரி அல்லது சிக்ஸ் வழங்கும் போது பிரச்சனையில்லை. உங்களால் இதை செய்ய முடியும் என்று கேப்டனே சொல்லும் போது அது பவுலர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பையிலும் சூரியகுமார் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -