இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க சூரியகுமார் யாதவ் எடுத்துள்ள புது முடிவு – நடந்தா நல்லா இருக்கும்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரராக தற்போது உருவெடுத்துவரும் சூரியகுமார் யாதவ் இந்த 2022-ஆம் ஆண்டு பங்கேற்ற டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார். அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை சூரியகுமார் யாதவை விடுத்து இந்திய அணி களம் இறங்கவே வாய்ப்பு இல்லை இன்னும் அளவிற்கு தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

sky

- Advertisement -

இந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1164 ரன்கள் குவித்துள்ள அவர் இரண்டு சதங்களையும், 9 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதோடு இந்த ஆண்டு முழுவதுமே 46 ரன்கள் சராசரி மற்றும் 187 ஸ்ட்ரைக் ரேட் என கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ள சூரியகுமார் யாதவ் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பெறுவதற்கான வேலையை தற்போது சூரியகுமார் யாதவ் துவங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு ரஞ்சி தொடருக்காக அறிமுகமான சூரியகுமார் யாதவ் இதுவரை 74 பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 5326 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 26 அரை சதங்களும் அடங்கும்.

Suryakumar Yadav 1

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி சீசனில் 17 பேர் கொண்ட மும்பை அணியில் அவர் பங்கேற்று விளையாட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திர பிரதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி முதல் வெற்றியை பதிவுசெய்த வேளையில் தற்போது அடுத்த போட்டிக்கான மும்பை அணியில் சூரியகுமார் யாதவ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டி வரும் டிசம்பர் 20 (நாளை) முதல் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ரஞ்சி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரகானே செயல்பட்டு வருகிறார். இவ்வேளையில் அந்த அணியில் சூரியகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார். இந்த ரஞ்சி தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாகவும் அவர் தனது முழுமையான பங்களிப்பை அளித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அவரை ரொம்ப காலம் தடுத்து நிறுத்த முடியாது, பேசாம ராகுலை ட்ராப் பண்ணுங்க – இளம் வீரருக்காக முகமத் கைஃப் கோரிக்கை

இந்த ரஞ்சி தொடரில் அவர் மிகச்சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்தடுத்து இந்தியாவில் நடைபெற உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

Advertisement