நான் டி20 ப்ளேயர் மட்டும் இல்ல, என்னோட அடுத்த டார்கெட் அதுதான் – சூரியகுமார் பேசியது என்ன?

Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் ஓய்வெடுப்பதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கியுள்ள இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றது. மௌன்ட் மௌங்கனி நகரில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சூரியகுமார் யாதவின் அதிரடியான 111* (51) ரன்கள் சதத்தால் 20 ஓவர்களில் 191/6 ரன்கள் குவித்தது.

Suryakumar Yadav.jpeg

- Advertisement -

அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 (52) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பவுலர்கள் வசப்படுத்தினாலும் அதற்கு சதமடித்து அடித்தளமிட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அடுத்த டார்கெட்:

முன்னதாக இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து வாய்ப்புக்காக காத்திருந்த அவரை தொடர்ந்து தேர்வுக்குழு புறக்கணித்து வந்தது. இருப்பினும் ரசிகர்களின் தொடர் கோரிக்கையாலும் கடினமான போராட்டத்தாலும் 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு தாமதமாக 30 வயதில் சூரியகுமார் யாதவ் அறிமுகமானார். ஆனால் கடந்த ஒன்றரை வருடத்துக்குள் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கும் அவர் சூப்பர் ஸ்டார் அணுகு முறையில் விளையாடி வருகிறார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்த வருடம் சக்கை போடு போட்டு வரும் அவர் அதிக ரன்கள், சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து குறுகிய காலத்திலேயே மடமடவென தரவரிசையில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக உச்சத்தில் ஜொலித்து வருகிறார். அதை விட நாலாபுறமும் சுழன்றடிக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று பெரும்பாலானவர்கள் போற்றுகிறார்கள். இருப்பினும் தற்சமயத்தில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக கருதப்படும் அவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு பெறவில்லை.

- Advertisement -

பொதுவாக என்னதான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கினாலும் ஒரு பேட்ஸ்மேனின் உண்மையான தரத்தையும் திறமையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்தே வல்லுநர்கள் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே தம்முடைய அடுத்த இலக்கு என்று தெரிவிக்கும் சூரியகுமார் அதற்கான நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இது பற்றி நேற்றைய போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

Suryakumar-Yadav

“பொதுவாக நாங்கள் கிரிக்கெட்டை விளையாட துவங்கும் போது சிவப்பு நிற பந்தை வைத்தே தொடங்குவோம். அந்த வகையில் மும்பை அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் நான் ஓரளவு சிறப்பாக விளையாடியுள்ளதால் டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றிய தேவையான அனுபவம் என்னிடம் உள்ளது. கடந்த காலங்களில் சிவப்பு நிற பந்திலும் நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனவே என்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டி விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அப்படி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சக்கை போடு போடுவதால் சூரியகுமார் யாதவ் ஒரு சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு நிற பந்தை பயன்படுத்தி விளையாடப்படும் முதல் தர கிரிக்கெட்டில் ஏற்கனவே 77 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் 10 சதங்கள் உட்பட 5326 ரன்களை 44.01 என்ற சிறப்பான சராசரியில் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : 3 ஆவது டி20 போட்டியிலிருந்து திடீரென விலகிய கேன் வில்லியம்சன் – காரணம் இதுதானா?

சொல்லப்போனால் அதை வைத்தே டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பைப் பெற்று மிரட்டுவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement