IND vs NZ : 3 ஆவது டி20 போட்டியிலிருந்து திடீரென விலகிய கேன் வில்லியம்சன் – காரணம் இதுதானா?

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது வெலிங்க்டன் நகரில் நடைபெற இருந்த வேளையில் அந்த போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மவுன்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsNZ

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை நவம்பர் 22-ஆம் தேதி நேப்பியர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும். அதே வேளையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும் என்கிற நிலை இருப்பதினால் இந்த மூன்றாவது போட்டி பரபரப்பான போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் நாளைய இந்த மிக முக்கியமான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து திடீரென நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kane-Williamson

இது குறித்த தகவலை நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கேன் வில்லியம்சன் விலகி இருப்பதற்கு காரணம் யாதெனில் அவர் நாளை மருத்துவரை நேரில் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் தான் அவர் நாளைய போட்டியில் விளையாடவில்லை. அதை தவிர்த்து அவருக்கு எந்தவித காயமோ, பிரச்சனையோ கிடையாது. அவர் நாளை நடைபெறவுள்ள இந்த மருத்துவ சந்திப்பில் பங்கேற்ற பின்னர் மீண்டும் ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவில் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் வேலையாகாது – தோனி உட்பட வரலாற்றில் இரட்டை தலைமையை எதிர்த்த 3 ஜாம்பவான்கள்

மேலும் நாளைய போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு கேன் வில்லியம்சன் அணியிலிருந்து விலகியதால் நாளைய போட்டியில் டிம் சவுதி அணியின் கேப்டனாக வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement