இந்தியாவில் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் வேலையாகாது – தோனி உட்பட வரலாற்றில் இரட்டை தலைமையை எதிர்த்த 3 ஜாம்பவான்கள்

Captain
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக அழுத்தமான ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் ஒரு நாக் அவுட் போட்டியின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் படுதோல்வி சந்தித்ததே இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இத்தொடரில் விராட் கோலி தவிர்த்து கேப்டன் ரோகித் உட்பட பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட சீனியர்களை அகற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்குமாறு கோரிக்கைகள் குவிந்தன.

BCCI-and-Rohit

- Advertisement -

அதற்கு செவி சாயத்த பிசிசிஐ சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கூண்டோடு நீக்கியுள்ளது. அத்துடன் புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழுவுக்கு ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டிலும் வெவ்வேறு தரமான கேப்டன்களை நியமிப்பதே முதல் வேலையாக இருக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் விராட் கோலிக்கு பின் 3 வகையான அணிக்கும் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்று ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய 2 முக்கிய தொடர்களில் வெற்றியை பதிவு செய்ய தவறிய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளது.

வேலைக்கு ஆகாது:

அதாவது 35 வயதை கடந்து விட்ட அவர் வரும் காலங்களில் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தை போல விரைவில் இந்தியாவிலும் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் அதாவது வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய வெவ்வேறு வகையான கிரிக்கெட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கும் வேலை துவங்கியுள்ளது. ஆனால் அது வெளிநாட்டு அணிகளுக்கு சாத்தியமாகும் என்றும் இந்தியா போன்ற கிரிக்கெட்டை மதமாகக் கொண்டாடும் நாட்டுக்கு செட்டாகாது என்று வரலாற்றில் எதிர்ப்பு தெரிவித்த 3 ஜாம்பவான்களை பற்றி பார்ப்போம்:

Kohli

1. செட்டகாது: 3 விதமான உலக கோப்பைகளை வென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக தரம் உயர்த்திய பெருமையைக் கொண்ட மகத்தான கேப்டன் தோனி 2014இல் டெஸ்ட் மற்றும் 2017இல் வெள்ளைப்பந்து கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலியிடம் சமயம் பார்த்து ஒப்படைத்தார். குறிப்பாக 2017இல் கேப்டன் பதவியிலிருந்து மொத்தமாக விலகிய அவர் இந்தியாவில் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் ஒத்து வராது என்று பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெவ்வேறு வீரர்கள் கேப்டன்ஷிப் செய்வதை நான் நம்புவதில்லை. ஏனெனில் ஒரு அணிக்கு ஒரு தலைவன் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவில் ஸ்ப்லிட் கேப்டன்ஷிப் வேலை செய்யாது என்பதால் சரியான நேரத்திற்காக நான் காத்திருந்தேன். குறிப்பாக விராட் கோலி அந்த வேலையை எளிதாக செய்ய வேண்டும் என்ற அக்கறையுடன் காத்திருந்து தற்போது நான் விலகுவதில் எந்த தவறுமில்லை. தற்போதைய அணி 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் என்று நம்புவதால் இதுவே நான் விலகுவதற்கான சரியான நேரம்”

dhoni

“அணியை ஒருவர் வழி நடத்துவதை மட்டுமே நான் எப்போதும் விரும்புவேன். விராட் கோலியிடம் டெஸ்ட் கேப்டன்ஷிப் கொடுத்த போதே அதை பற்றி அவர் சற்று புரிந்து கொண்டு எளிதாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இதுவரை காத்திருந்து தற்போது வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பொறுப்பையும் ஒரு வழியாக அவரிடம் ஒப்படைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

- Advertisement -

2. இரண்டு ஓனரா: இந்தியாவில் கிரிக்கெட் ஆலமரமாய் வளர்ந்து நிற்க முக்கிய காரணமாக திகழும் 1983 உலக கோப்பையை வென்ற ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் இது பற்றி கடந்த காலத்தில் பேசியது பின்வருமாறு. “நமது கலாச்சாரத்தில் அது எப்போதும் நடக்காது. ஒரு கம்பெனியில் நீங்கள் 2 நிர்வாக இயக்குனர்களை நியமிக்க முடியுமா? ஏனெனில் 70 – 80% வரை அனைத்து வகையான இந்திய அணியிலும் ஒரே மாதிரியான வீரர்களே இருப்பார்கள்”

Kapil-Dev

“அதனால் அவர்கள் வெவ்வேறு கேப்டன்களையும் வெவ்வேறு அணுகு முறையையும் விரும்ப மாட்டார்கள். ஒருவேளை 2 கேப்டன்கள் இருந்தால் நமது வீரர்கள் அவர் தான் என்னுடைய டெஸ்ட் கேப்டன் என்று வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடும் போது நினைப்பார்கள். எனவே அவர்களை எரிச்சலாக்க விரும்பவில்லை” என்று பேசினார்.

3. ஒரே கேப்டன்: இந்தியாவின் மற்றொரு ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் இது பற்றி வரலாற்றில் பேசியது பின்வருமாறு. “உங்கள் கேப்டன் தனது செயல்பாட்டில் சமரசம் செய்யாமல் மகிழ்ச்சியாக விளையாடும் வரை மாற்றம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக விராட் கோலி அனைத்து கிரிக்கெட்டிலும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் உணர்கிறேன். இங்கிலாந்தில் வேண்டுமானால் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் வேலை செய்யும்”

“ஏனெனில் ஜோ ரூட் பெரும்பாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. இயன் மோர்கன் பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலாக செயல்படும் ஒருவர் அந்த அனைத்திற்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement