தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான அதிரடி : டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட – சூரியகுமார் யாதவ்

Suryakumar-Yadav
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த துவக்க வீரரான முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Rizwan-2

- Advertisement -

ஆனால் அதே வேளையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 69 ரன்களை விளாசிய இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தற்போது டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்திய சூரியகுமார் யாதவ் தற்போது 801 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி இந்த தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Suryakumar Yadav vs RSA

இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். பாபர் அசாம் 799 புள்ளிகள் உடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை டாப் 10-இல் இருக்கும் ஒரே வீரராக தற்போது சூரியகுமார் யாதவ் தனி இடம் பிடித்து இருக்கிறார்.

- Advertisement -

மற்றபடி ரோகித் சர்மா இந்த பட்டியலில் 13-வது இடத்தையும் விராட் கோலி 15-வது இடத்திலும், கே.எல் ராகுல் 22-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று டி20 கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை பொருத்தவரை ஹேசல்வுட் 737 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தெ.ஆ சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர்.

இதையும் படிங்க : ப்ரைட்டான வருங்காலம் காத்திருக்கு – சஞ்சு சாம்சன் பற்றி முதல் முறையாக கங்குலி பேசியது என்ன?

இந்த பவுலர்களின் பட்டியலில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 4-ஆம் தேதி முடிவடையும் வேளையில் மீண்டும் டி20 தரவரிசையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement