ப்ரைட்டான வருங்காலம் காத்திருக்கு – சஞ்சு சாம்சன் பற்றி முதல் முறையாக கங்குலி பேசியது என்ன?

- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படாதது அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் உழைத்து 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவருக்கு 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு 2019இல் தான் கிடைத்தது என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதன்பின் 1 வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என நிலையற்ற வாய்ப்புகளைக் பெற்று வந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து கேப்டனாக 2008க்குப்பின் ராஜஸ்தானை பைனலுகு அழைத்துச் சென்றும் அதன்பின் நடந்த தென்னாப்ரிக்க தொடரில் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை.

Samson

- Advertisement -

அதனால் ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் வேறு வழியின்றி அதைத்தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகம் 2வது போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது. அதில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரை சதமடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு இனிமேலாவது தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் அதுவரை கொடுத்த வாய்ப்பில் அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதை காரணமாக காட்டிய தேர்வுக்குழு இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று ரசிகர்கள் நம்பினர்.

நிலையற்ற வாய்ப்பு:
ஆனால் அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் முதன்மை வீரர்கள் வந்ததால் கழற்றிவிடப்பட்ட அவருக்கு அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓரளவு நிலையான வாய்ப்பு கிடைத்தது. அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட அவர் ஜிம்பாப்வே தொடரில் முதல் முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்று சாதித்துக் காட்டினார். அதனால் வேகம், பவுன்ஸ் போன்ற சவால்களை சுலபமாக எதிர்கொள்ளும் திறமையை இயற்கையாகவே கொண்டுள்ள அவருக்கு அதற்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Sanju Samson

ஆனால் மீண்டும் ஆரம்பம் முதல் இப்போது வரை சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்த தேர்வுக்குழு மீண்டும் அவரை கழற்றி விட்டு அதே பழைய வேலையை காட்டியுள்ளது. அதைவிட உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. அதனால் ரசிகர்களின் கோபத்தை தணிப்பதற்காக நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக பங்கேற்ற இந்திய ஏ அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு மழுப்பியது.

- Advertisement -

அந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த தொடரிலும் பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய சஞ்சு சாம்சன் கேப்டனாக அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி 3 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய ஏ அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக விளையாட தகுதியானவன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள அவருக்கு நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்குப் பின் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Ganguly

சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் உலககோப்பையில் ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டாரே தவிர வருங்காலங்களில் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் சவுரவ் கங்குலி இது பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சஞ்சு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்காக விளையாடும் அவர் உலகக்கோப்பையை ஜஸ்ட் மிஸ் செய்து விட்டார் அவ்வளவு தான். அவர் இந்திய அணியின் வருங்கால திட்டங்களில் உள்ளார். மேலும் விரைவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : ஜெயிச்சது ஓகே. ஆனா இந்திய அணி சேஸிங்கில் படைத்த மோசமான சாதனையை கவனிச்சீங்களா?

அத்துடன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அங்கு கேப்டனாகவும் உள்ளார்” என்று கூறினார். அதாவது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பின் அடுத்த உலகக்கோப்பை தொடரை மையப்படுத்திய இந்திய அணியில் சஞ்சு சாம்சனை முக்கிய வீரராக பயன்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கங்குலி கூறியுள்ளார்.

Advertisement