IND vs RSA : ஜெயிச்சது ஓகே. ஆனா இந்திய அணி சேஸிங்கில் படைத்த மோசமான சாதனையை கவனிச்சீங்களா?

Markram
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றுகளிலேயே தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட பலமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையேற்ற பிறகு சொந்த மண்ணில் நடைபெற்று வரும் அனைத்து டி20 தொடர்களிலும் இதுவரை இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

- Advertisement -

அப்படி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Suryakumar Yadav

இந்த போட்டியின் சேஸிங்கின் போது ரோகித் சர்மா ரன்கள் எதுவும் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்த வேளையில் இந்திய அணியானது 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ராகுல் 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களையும் அடித்து இந்திய அணியை அட்டகாசமான வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணியானது டி20 கிரிக்கெட்டில் இதுவரை படைக்காத மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அந்த மோசமான சாதனை யாதெனில் : குறைவான இலக்கினை சேசிங் செய்வதனால் சற்று நிதானத்துடன் சேசிங்கை ஆரம்பித்த இந்திய அணியானது ஆரம்பம் முதலே ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என்று மிகவும் பொறுமையாக விளையாடியது. அதன் காரணமாக இந்திய அணி முதல் ஆறு ஓவர்களின் முடிவில் அதாவது பவர்பிளே-வின் முடிவில் வெறும் 17 ரன்களை மட்டுமே அடித்தது.

இதையும் படிங்க : IND vs SA : ஆஹா என்ன ஒரு தரமான இன்னிங்ஸ், கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் கைதட்டி பாராட்டி முழு ஆதரவு

இப்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் ஆறு ஓவர்களின் முடிவில் அதாவது பவர்பிளேவில் அடித்த குறைந்த ஸ்கோர் (17-1) இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி20 வரலாற்றில் இந்திய அணி பவர்பிளே ஓவர்களில் குவித்த குறைந்தபட்ச ஸ்கோராக இந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement