1164 பந்துகள்.. விராட் கோலியின் சாதனை சமன் செய்த சூரியகுமார்.. யாராலும் நெருங்க முடியாத உலக சாதனை

Suryakumar Yadav 5
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68* (39) ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து மழை தாமதத்திற்கு பின் 15 ஓவரில் 152 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா ரீசா ஹென்றிக்ஸ் 49 (27) ஐடன் மார்க்ரம் 30 (17) ரன்கள் எடுத்த உதவியுடன் 13.5 ஓவரிலேயே இலக்கை தொட்டு மிகவும் எளிதாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

சூர்யகுமாரின் உலக சாதனை:
மறுபுறம் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி வெற்றியை நழுவ விட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த அதே இந்திய அணி இப்போட்டியில் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 20 – 30 ரன்கள் எடுக்க தவறியதுடன் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் இந்த போட்டியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 6/2 என தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்தார். குறிப்பாக தமக்கே உரித்தான ஸ்டைலில் தென்னாப்பிரிக்க பவுலர்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வெளுத்து வாங்கிய அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (36) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த 56 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் இதுவரை 56 இன்னிங்ஸில் 2041* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை சூரியகுமார் சமன் செய்துள்ளார். இதற்கு முன் விராட் கோலியும் சரியாக 56 இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்து இந்த சாதனை முதல் வீரராக படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவங்க கேட்டதால்.. மறுபடியும் ஷூ எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆட்டநாயகன் ஷம்சி வேடிக்கையான பேட்டி

அதை விட இந்த 2000 ரன்களை 1164 பந்துகளில் சூரியகுமார் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் சாதனையை தகர்த்துள்ள அவர் யாராலும் நெருங்க முடியாத புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் (பந்துகள்):
1. சூரியகுமார் யாதவ் : 1164*
2. ஆரோன் பின்ச் : 1283
3. கிளன் மேக்ஸ்வெல் : 1304
4. டேவிட் மில்லர் : 1398
5. கேஎல் ராகுல் : 1415

Advertisement