அவங்க கேட்டதால்.. மறுபடியும் ஷூ எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆட்டநாயகன் ஷம்சி வேடிக்கையான பேட்டி

Tabriz Shamshi
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா போராடி 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், கில் ஆகிய துவக்க வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68* (39), திலக் வர்மா 29 (20), ரவீந்திர ஜடேஜா 19 (14) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

ஷூ கொண்டாட்டம்:
தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து மழை தாமதத்தால் 15 ஓவரில் 152 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா ரிசா ஹென்றிக்ஸ் 49, கேப்டன் மார்க்ரம் 30 ரன்கள் அடுத்த உதவியுடன் 13.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து எளிதாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றுள்ளது.

அதனால் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய தப்ரீஸ் சம்சி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பொதுவாகவே விக்கெட்டுகளை எடுத்தால் தம்முடைய காலணியை கழற்றி காதில் வைத்து ஃபோன் செய்வது போல் கொண்டாடக்கூடிய அவர் சமீப காலங்களாக அதை தவிர்த்து வந்தார்.

- Advertisement -

ஆனால் தனது குழந்தைகள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் இப்போட்டியில் அப்படி கொண்டாடியதாக தெரிவித்த அவர் விருது வென்ற பின் வெற்றியை பற்றி பேசியது பின்வருமாறு. “அப்படி கொண்டாடுவதை நான் மூட்டை கட்டி வைத்திருந்தேன். ஆனால் குழந்தைகள் தொடர்ந்து மீண்டும் அப்படி கொண்டாடுமாறு என்னிடம் கேட்டனர். எனவே அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை”

இதையும் படிங்க: இந்த மாதிரி நாங்க ஆடனும்னு முடிவு பண்ணி தான் ஆடுறோம். தோல்விக்கு பிறகும் வீரர்களை பாராட்டிய – சூரியகுமார் யாதவ்

“அழுத்தமான சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக அசத்தியது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூரியகுமார் யாதவ் அற்புதமான வீரர் என்பதை மீண்டும் இன்று காட்டினார். ஐடன் மார்க்ரம் கேப்டனாக மாற்றங்களை செய்ததில் இன்று அபாரமாக செயல்பட்டார். ராப் வந்ததிலிருந்து அணியின் சூழ்நிலை நன்றாக இருக்கிறது. அவர் களத்தில் எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தாலும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் வெற்றியாக கிடைத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement