உண்மையாவே அந்த ஜாம்பவானோட கம்பேர் செஞ்சு பாராட்ட சூர்யகுமார் தகுதியானவர் தான்.. ஜஹீர் கான் கருத்து

Zaheer Khan 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாக முன் நின்று வழிநடத்தி வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஆரம்பம் முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் அவர் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனை படைத்து 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் இவர் ஒருநாள் போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்று பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஜஹீர் கான் பாராட்டு:
ஆனால் அப்படி விமர்சிக்கும் அதே ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பாராட்டும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே சூரியகுமார் அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் போல 360 டிகிரியில் விளையாடுகிறார் என்று சூரியகுமார் யாதவ் பாராட்டப்படுவதற்கு தகுதியானவர் என்று ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் தற்போது நிறைய பாராட்டுகளை பெறுவதற்கு தகுதியானவராக இருக்கிறார்”

- Advertisement -

“இப்போது சுற்றிச் செல்லும் வீரர்கள் அவரைப் பார்த்து பிரதியெடுக்க முயற்சிக்கிறார்கள் இல்லையா? ஏனெனில் அவர் ஓவர் தி பாயிண்ட், ஷார்ட் தேர்ட் மேன், ஃபைன் லெக் போன்ற பகுதிகளில் தொடர்ந்து சிக்ஸர் அடிப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதன் அடிப்படையில் அனைத்து அம்சங்களிலும் ஏபி டீ வில்லியர்ஸ்ஸின் 360 டிகிரி குறி சொல்லுக்கு வரும் போது அவர் நிச்சயமாக அதற்கு தகுதியானவராக இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கேஎல் ராகுலை முந்திய ருதுராஜ் கைக்வாட்.. டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆல் டைம் சாதனை

அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே அடிப்பது உட்பட அனைத்து வகையான திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்களை அடிக்கும் சூரியகுமார் யதாவை நிறைய இளம் வீரர்களும் பின்பற்ற முயற்சிக்கின்றனர். எனவே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று சொல்வதற்கு சூரியகுமார் யாதவ் தகுதியானவராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement