கேஎல் ராகுலை முந்திய ருதுராஜ் கைக்வாட்.. டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆல் டைம் சாதனை

Ruturaj gaikwad 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி உலகக்கோப்பையில் தோற்றாலும் இருதரப்பு தொடரை வெல்வோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

குறிப்பாக ராய்ப்பூர் நகரில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரிங்கு சிங் 46, ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ருதுராஜ் சாதனை:
அந்த வகையில் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த சிறிய ஆறுதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக இத்தொடரில் துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 3வது போட்டியில் சதமடித்து 123* ரன்கள் குவித்தும் மேக்ஸ்வெல் அதிரடியால் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இருப்பினும் 4வது போட்டியில் 32 (27) ரன்கள் எடுத்த அவர் வெற்றியில் பங்காற்றினார். மேலும் அந்த 32 ரன்களையும் சேர்த்து சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் 4000 ரன்களை கடந்துள்ளார். அதிலும் 116 இன்னிங்ஸில் 4000 ரன்களை எடுத்துள்ள அவர் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை உடைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கேஎல் ராகுல் 117 இன்னிங்ஸில் 4000 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது அவரை விட ஒரு இன்னிங்ஸ் குறைவாக ருதுராஜ் கைக்வாட் இந்த சாதனையை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ருதுராஜ் கைக்வாட் : 115*
2. கேஎல் ராகுல் : 116
3. விராட் கோலி : 138
4. சுரேஷ் ரெய்னா : 143
5. ரிஷப் பண்ட் : 147

இதையும் படிங்க: தோனி சொன்ன அந்த மெசேஜ்.. அதை எப்போவும் ஃபாலோ பண்ணுவேன்.. ருதுராஜ் பேட்டி

அந்த வகையில் ஏற்கனவே 2021 ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் 2022 விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார். அப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சீராக முன்னேறி வரும் அவர் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement