தோனி சொன்ன அந்த மெசேஜ்.. அதை எப்போவும் ஃபாலோ பண்ணுவேன்.. ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad MS Dhoni
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3 – 1* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் அசத்தி வரும் இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், இசான் கிசான் போன்ற நிறைய இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் மிகவும் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தும் வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். குறிப்பாக 3வது போட்டியில் முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டும் எடுத்து நிதானத்தை காட்டிய அவர் கடைசியில் அதிரடியாக விளையாடி 123* (57) ரன்கள் விளாசி இந்தியா 222 ரன்கள் குவிப்பதற்கு உதவினார்.

- Advertisement -

தோனியின் மாணவன்:
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஆரம்பத்தில் அம்பியாகவும் கடைசியில் அந்நியனாகவும் விளையாடியது ரசிகர்களை பாராட்ட வைத்தது. இந்நிலையில் டி20 போட்டிகளாக இருந்தாலும் முதலில் சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடும் யுக்தியை சென்னை அணியில் விளையாடிய போது தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ருதுராஜ் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி 4வது போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “அதை சென்னை அணியில் இருந்ததால் கற்றுக் கொண்டேன் என்று நான் சொல்வேன். ஏனெனில் மஹி பாய் எப்போதும் சூழ்நிலைகளை படித்து போட்டியை புரிந்து கொண்டு எப்படி அது நகர்கிறது என்பதை தெரிந்து கொள்வார் என்பது உங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“மேலும் அவர் எப்போதும் உங்களுடைய அணியன் ஸ்கோரை பார்த்து விளையாடுங்கள் என்ற மெசேஜை போட்டிகளின் போது அனுப்புவார். அதனால் சில நேரங்களில் நீங்கள் 15 ரன்களில் இருக்கிறீர்களா அல்லது களத்திற்கு புதிதாக வந்துள்ளீர்களா என்பது முக்கியமல்ல. அந்த குறிப்பிட்ட ஓவரில் அணிக்காக எப்படி விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: அந்த ஆஸி வீரர் இருந்திருந்தா இந்த டி20 கோப்பையை கூட இந்தியா தொட்டுருக்க முடியாது.. கேடிச் கருத்து

“எனவே அந்த பண்பு தொடர்ந்து என்னுடன் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை நான் தொடர்ந்து பின்பற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி டிசம்பர் 3ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement