அந்த ஆஸி வீரர் இருந்திருந்தா இந்த டி20 கோப்பையை கூட இந்தியா தொட்டுருக்க முடியாது.. கேடிச் கருத்து

Simon Katich
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டுகளின் முடிவில் இந்தியா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இந்தியா விளையாடி வருகிறது.

அதில் கேப்டன் சூரியகுமார் யாதவ், இஷான் கிசான், ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக விளையாடி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உதவினார்கள். ஆனால் 3வது போட்டியில் அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் சதமடித்து 104* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்தார். அதனால் அவ்வளவு எளிதில் இந்த கோப்பையையும் உங்களை வெல்ல விடமாட்டோம் என்று காண்பித்த ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

- Advertisement -

தொட்டுருக்க முடியாது:
அந்த நிலைமையில் ராய்ப்பூர் நகரில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியில் ரிங்கு சிங் 46, ஜெய்ஸ்வால் 35, ஜிதேஷ் சர்மா 37 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த வகையில் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இதே போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இந்த கோப்பையை கூட இந்திய அணியால் வென்றிருக்க முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச் மறைமுகமாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் அது நடந்திருக்காது”

இதையும் படிங்க: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடியடித்த இந்திய அணி – விவரம் இதோ

“ஏனெனில் மேக்ஸ்வெல் தவிர்த்து இப்போட்டி மட்டுமல்லாமல் இத்தொடர் முழுவதிலும் எஞ்சிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறினார்கள். குறிப்பாக அவர்கள் நேராக அடிக்காமல் குறுக்கே தவறாக அடித்தனர். அவர்கள் சுழலை சற்று சிறப்பாக எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement