சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடியடித்த இந்திய அணி – விவரம் இதோ

IND-vs-PAK
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

நேற்று பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் 20 வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் மகத்தான சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 226 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி 135 வெற்றிகளை பெற்று அதிக வெற்றியை பெற்ற அணியாக முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியுடன் சேர்த்து 213 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 136-வது வெற்றியை பெற்று அதிக வெற்றிகளை பெற்ற அணியாக முதலிடத்திற்கு சென்றுள்ளது.

இதையும் படிங்க : அவரோட பேட்டிங்கை பாக்குறதுக்காகவே இந்தியா மேட்ச் பாத்துட்டு வரேன் – ஆண்ட்ரே ரசல் வெளிப்படை

அதுமட்டும் இன்றி கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்திய அணி தொடர் வெற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டியானது நாளை டிசம்பர் 3 ஆம் தேதி பெங்களுருவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement