அவரோட பேட்டிங்கை பாக்குறதுக்காகவே இந்தியா மேட்ச் பாத்துட்டு வரேன் – ஆண்ட்ரே ரசல் வெளிப்படை

Russell
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக இளம் வீரர்களை வைத்து புதிய அணியை கட்டமைக்கப்பட்டு அந்த அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது.

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு புதிய நம்பிக்கையை பிசிசிஐ வீரர்களிடையே விதைத்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இவ்வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரினை ரிங்கு சிங்கிற்காகவே தான் பார்த்து வருவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 போட்டிகளை பார்த்து வருகிறேன்.

- Advertisement -

ஒருவேளை போட்டியினை பார்க்க தவறவிட்டாலும் ஹைலைட்ஸ் பார்ப்பதை தவறவிடுவதில்லை. அதற்கு காரணம் ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பார்ப்பதற்கு தான் என்று ரசல் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரிங்கு சிங் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது அவரது ஆட்டத்தை நான் பார்த்துள்ளேன். தற்போது பெரிய மேடையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : எல்லாரும் இந்தியா மாதிரி இருப்பாங்களா.. ஆஸியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

ரிங்கு சிங் கடைசி நேரத்தில் ஒரு ஃபினிஷராக களமிறங்கி போட்டியை முடித்துக் கொடுக்கும் விதத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் பேட்டிங் செய்யும்போது எனக்கும் அது நம்பிக்கையை தருகிறது. ரிங்கு சிங் ஒரு அருமையான வீரர் அவர் தற்போது இந்திய அணிக்காக செயல்பட்டு வரும் விதத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ஆண்ட்ரே ரசல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement