எல்லாரும் இந்தியா மாதிரி இருப்பாங்களா.. ஆஸியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

Pakistan Players
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஏமாற்றமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் 8வது முறையாக தொடர்ந்து உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக அவமானத் தோல்வியை பதிவு செய்தது நிறைய கிண்டல்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

எல்லாரும் இந்தியாவா:
அதற்காக நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணினயிருக்கு விமானத்தில் ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டவர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.

இருப்பினும் இதே பாகிஸ்தான் அணிக்கு 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க வந்த போது ஹைதராபாத் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் இந்திய அணியினருக்கு நிகராக ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர். மேலும் விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை பாகிஸ்தான் அணியினருக்கு பிசிசிஐ சார்பிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அது கூட பரவாயில்லை. ஆனால் விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க ஆஸ்திரேலியா வாரியம் அல்லது பாகிஸ்தான் வாரியம் சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லாரியிலிருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: ராய்ப்பூரில் இந்தியாவுக்கு வரவிருந்த.. மிகப்பெரிய அவமானத்தை அப்படியே அமுக்கிய பிசிசிஐ

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் எல்லோரும் எங்கள் நாட்டை போல உங்களை வரவேற்க மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியினருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதே போல பாகிஸ்தான் அணியினருக்கு சரியான வரவேற்பு கொடுக்காத ஆஸ்திரேலிய காரியத்தின் மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement