சூர்யகுமார் யாதவுக்கு எதிர் போட்டியாக சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்.. சொதப்பல் புள்ளிவிவரம் இதோ

Shreyas Iyer 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 3 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்விக்கு இந்தியா ஒரு சிறிய ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற உலகக் கோப்பையில் விளையாடிய பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை போலவே 2023 உலகக் கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

சொதப்பும் ஸ்ரேயாஸ்:
இருப்பினும் கடைசி 2 போட்டியில் துணை கேப்டனாக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதியான நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற 4வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இணைந்தார். அந்த நிலைமையில் ஜெய்ஸ்வால் – ருதுராஜ் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்த பின் 50/1 என்ற சூழ்நிலையில் களமிறங்கிய அவர் 7 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் கடைசியில் ரிங்கு மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் முக்கிய ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர். அப்படி கம்பேக் போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறார். ஆம் 2023 உலகக் கோப்பை உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 இன்னிங்ஸில் அவர் 530 ரன்களை 75.71 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார்

- Advertisement -

ஆனால் அதற்கு நேர் மாறாக கடந்த 10 சர்வதேச டி20 போட்டிகளில் வெறும் 148 ரன்களை 16.44 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் சமீப காலங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடவில்லை. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மிரட்டலாக செயல்பட்டாலும் 2023 உலகக்கோப்பை உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது அவரைப் போலவே அவருக்கு நேர்மாறாக ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்க வேண்டிய டி20 கிரிக்கெட்டில் சற்று தடுமாறி வருவது வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மொத்தத்தில் இதுவரை தன்னுடைய கேரியரில் 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1051 ரன்களை 30.03 என்ற சராசரியில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement